கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விஸ்தரிக்கப்படுகிறது - 3 வீடுகளை அகற்றவும் தீர்மானம்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் புதிய பள்ளிவாசலின்மீது கடந்த சனிக்கிழமை(10) நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து புத்தசாசன மதவிவகார அமைச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) இதற்கு தீர்வு காண்பதற்காக விசேட கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் புதிய பள்ளிவாசலை மூடிவிட்டு பழைய பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதுடன் அப்பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு தடையாகவிருந்த அரச மரத்தை வெட்டி அப்பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்கும் பள்ளியின் விஸ்தரிப்புக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. பழைய பள்ளிவாசல் இலக்கம் 166 இலும் புதிய பள்ளிவாசல் இலக்கம் 158 இலும் இருந்தாலும் ஒரே பெயரிலேயே இரண்டும் இருக்கிறது.
மேலும் பள்ளியுடன் தொடர்புள்ள மூன்று வீடுகளை பெற்று பள்ளிவிஸ்தரிப்புக்கு வழங்குவதற்கும் அதற்கு பதிலாக அம்மூன்று வீட்டாருக்கும் வேறு இடத்தில் மாற்றிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள அந்த மூன்று வீடுகளும் தலா இரண்டு பேர்ச் வீதம் காணப்படுகின்றது. இவ்வாறு அம்மூன்று வீடுகளும் பள்ளிக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டால் பள்ளிவாசலை போதிய இடவசதியுடன் விஸ்தரித்து தொழுகை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
குறிப்பு:- கடந்த காலங்களில் இப்பள்ளிவாசலை விஸ்தரிக்க முடியாததற்கு பள்ளிக்கு அருகில் இருந்த அரச மரமே காரணமாகும். தற்போது அதனை வெட்டுவதற்கு அனுமதியளித்ததே எமக்கு கிடைத்த வெற்றியாகுமென பிரதேசவாசியொருவர் கருத்து தெரிவித்தார்.

Dear Bros and sister,
ReplyDeleteplease dont talk about winning and loosing here, and in this situation. No individual or society has won on lost on this matter.It has happend, maasha allah, allah has given us a amicable solution, so we have to use this opportunity to rebuild peace and harmony in this area and whole Sri lanka.
May allah forgive and show right path to all who involved in such incidents, and bless who work hard to bring things calm and keep peace.
"Innallaha Ma'as saabireen". Allah with whom are patient and compromise for the sake of unity and peace.
நமது தலைமையின்(acju) வேண்டுகோளை ஏற்று எம் முஸ்லிம் சகோதரர்கள் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லஹ்விடம் உதவி தேடியதன் பலன்.அல்ஹம்துலில்லாஹ்.அவர்கள்(காபிர்கள்) வெறுத்த போதும் அவன் தன் ஒளியை நிலை நிருத்தியே தீருவான்.எமது தலைமையின் தூரநோக்கு செயற்பாடுகளை அதை விமர்சிக்கும் எம் அத்து மீறிய சகோதரர்கள் உணர்ந்து கை சேதப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.அதற்கு முன் தவ்பா செய்வது அவர்களுக்கு சிரந்ததாகும்
ReplyDeleteI believe, this is the victory on this issue. Allah helped us on the other way
ReplyDeleteALLAHU AKBAR....
ReplyDelete