Header Ads



கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

300வது உதைபந்தாட்டப் போட்டி பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று  ( 18) கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் விளையாட்டுக் குழுவின் தலைவர் எஸ்.எல்.யஹ்யாகான் தலைமையில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் மகாநாட்டிலகழகத்தின் செயலாளர் எஸ்.ரீ.எம்.பஸ்வாக் , பொருளாளர் எம்.எம்.ஏ.றஸாக் , பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.பளீல் , ஊடக பேச்சாளர் யு.எல்.றியாஸ் , கணக்காயவாளர் எஸ்.எம்.ஹாஜாகான் , பாடசாலை அதிபர் எம்.ஏ.அப்துல் றஸாக் மற்றும் இளைஞர் அணி பொருளாளர் பீ.எம்.லுக்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிராந்திய உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 1991 ஆம் ஆண்டு ஆரம்பித்த உதைபந்தாட்ட பயணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 300வது போட்டியாக தடம் பதிக்கவுள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சங்கம் 2010 ஆம் ஆண்டு கொழும்பு ஸீ.ஆர்.எப்.சி.விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற டிவிசன் 2 பிரிமியர் லீக் உதைந்தாட்ட சுற்றுப் போட்டியில் வட கிழக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக கல்முனையைச் சேர்ந்த ஒரு விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தைப் பெற்றது வரலாற்று சான்றாகும்.
 
22 வருடகால உதைபந்தாட்ட வரலாற்றில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 299 போட்டிகளில் கலந்து கொண்டு 161 போட்டிகளில் வெற்றியும் ,46 போட்டிகளில் வெற்றி தோல்வியின்றியும் 92 போட்டிகளில் தோல்வியனையும் சந்தித்துள்ளதுடன் 685 கோல்களை சார்பாக புகுத்தியுள்ளதுடன் தமது கழகத்திற்கு எதிராக 425 கோல்களும் எதிர் கழகங்களால் போடப்பட்டுள்ளதாகவும் இதுவரை 91 வீரர்கள் தமது கழகத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளதாகவும் கழகத்தின் செயலாளர் எஸ் ரீ. .எம்.பஸ்வாக் தெரிவித்தார்.
 
வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள 300வது போட்டியில் மாவனெல்ல யுனைடெட் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளதுடன் இந்நிகழ்விற்கு உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் ...............


    ====================SIRAJDEEN SIRO======================

    ReplyDelete

Powered by Blogger.