வன்னி ஊடகவியலாளர்களுக்கு 2 நாள் ஊடக செயலமர்வு
செய்தி மற்றும் தகவல் சேரித்தல், அறிக்கையிடல் ஆகிய செயற்பாடுகளின் போது ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடப்படும்.
அத்துடன் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுகின்ற பத்திரிகைத்துறையினருக்கான சுயகட்டுப்பாட்டு ஒழுக்கக்கோவை தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கும் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கும் இடையில் இணைப்பைப் பலப்படுத்துவதும் ஊடக செயற்பாட்டில் தவறுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் வழிகாட்டல்களைச் செய்வது என்பன இந்த சந்திப்புக்களின் முக்கிய குறிக்கோள்களாகும்.
கடந்த 10 வருடங்களாக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பத்திரிகைத்துறைசார் சுயகட்டுப்பாட்டு ஒழுக்கநெறிக் கோவை மற்றும் ஊடக சட்டங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வொன்றும் நடத்தப்பட விருக்கின்றது.
இந்த பயிற்சி செலமர்வுகளில் பங்குபற்ற விரும்பும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எம். எஸ். அமீர் ஹூசைன் முறைப்பாட்டு பொறுப்பதிகாரி, இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு அணைக்குழு, இல 96, கிருல வீதி, கொழும்பு – 05 என்ற முகவரிக்கு தமது விபரங்களை அனுப்பி வைப்பதன் ஊடாக இந்த செயலமர்வில் பங்குபற்ற முடியும். அல்லது 011 – 5353635 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment