Header Ads



முறையாக அனுகினால் எவருடனும் விவாதிக்கத் தயார் - சிங்கள ராவய அமைப்புக்கு SLTJ பதிலடி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து “சிங்கள ராவய” என்ற இனவாத பௌத்த அமைப்பு பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் சம்பந்தமில்லாத இணையதளங்களிலும் செய்திகளை பரப்பி வருகின்றார்கள்.

முதலில் இஸ்லாம் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு முறையாக பதிலளித்து பகிரங்க விவாதக் களத்தில் சத்தியம் எது என்பதை நிரூபிப்பதற்கு தயார் என்று பல முறை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

இப்போது விவாதிப்பதற்கு தயார் என்று கண்ட இடத்தில் எழுதும் இவர்கள் முறையான எந்தவொரு கடிதத்தையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பவில்லை என்பதை தெளிவாக அறிவித்துக் கொள்வதோடு, அவர்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில் சம்பந்தமில்லாத இடத்தில் பௌத்த இனவாதம் பற்றிய நமது ஜமாஅத் பிரச்சாரகர்கள் உரையாற்றியுள்ளதாக குறிப்பிட்டு அவர்களின் குறித்த செயல் மூலம் முன்னுக்குப் பின் முரனாக நடந்துள்ளார்கள்.

நாம் சம்பந்தமில்லாத இடத்தில் உரையாற்றியதாக குற்றம் சாட்டியவர்கள் சம்பந்தமில்லாத இடங்களில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை விவாதத்திற்கு அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த விவாத அழைப்பிற்கு சொந்தக்காரர்கள் சிங்கள ராவய எனும் அமைப்பாக இருந்தால் உண்மையில் அவர்கள் நம்முடன் விவாதத்திற்கு தயார் என்றால் முறையாக எமது முகவரிக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். எமக்கு முறையாக எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் சம்பந்தமில்லாத முறையில் ஆங்காங்கே கருத்துத் தெரிவிப்பது அறிவுடமையாகாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

எவரும் முறையாக  எம்மைத் தொடர்பு கொண்டால் விவாதிப்பதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராகவே இருகின்றது. அது முஸ்லிம்களில் இஸ்லாம் பற்றிய மாற்றுக் கருத்துள்ளவா்களானாலும், முஸ்லிம்கள் அல்லாதவர்களாகவே இருந்தாலும் சரியே! இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர். அப்துர் ராஸிக்
செயலாளர்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

4 comments:

  1. எலி என்று நினைத்து புலி வாலைப்பிடிக்கப்போகிரார்கள் இந்த ராவய அமைப்பினர்.... அறிவு பூர்வமான நமது தவ்ஹீத் சகோதரர்களின் அதிரடியான கேள்விகளுக்கு ராவய அமைப்பினர் அவமானப்படப்போவது உறுதி. இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்... அந்த நாளை நாம் மிகஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.... நாம் ஹலாலைக்காரணம்காட்டி குரான்ஆயத்துக்களை விற்கவில்லை... தாடிக்கு பதில் சொல்லத்தெரியாமல் தலை குனியப்போவதுமில்லை... இன்ஷாஅல்லாஹ் சீக்கிரம் முடிவுகட்டுங்கள் இந்த ராவய அமைப்பினருக்கு.... இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் சின்கல ராவய வின் மூக்குடைபடும் அந்த நாளை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  3. We will pray almighty Allh for all.

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்! ஆம், முறையாகத் தொடர்பு கொண்டு விதிமுறைகளுக்கமைய விவாதம் நடந்தால்தான் தெளிவு கிடைக்கும். அவர்கள் முறையாகத் தொடர்பு கொள்வார்கள் என்று நம்புவோம்; இல்லையென்றால் காட்டிக் கொடுக்கும் 'நம்மவர்கள்' கூட்டி வரட்டுமே! நமது நோக்கம் சத்தியம் வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நமது பங்கைச் செய்வதுதானே! பின்வாங்கி ஓடும் கூட்டமல்ல நாங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.