'முஸ்லிம் சமூகத்தின் குடும்பவியல் நிலை' (Part - 1)
(எஸ்.எல். மொஹமட் இம்தியாஸ் - நளீமி)
சமூக அமைப்பின் அடிப்படை குடும்பமாகும். எனவே இஸ்லாம் நேரிய சீரான குடும்ப அமைப்பைத் தோற்றுவிக்க விரும்புகின்றது. அதனடியாக பல குடும்பவியல் சட்டங்களை வகுத்து அவை பேணப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திக்; கூறியிருக்கின்றது. அவை மீறப்படும்போது சமூக வாழ்வின் அழிவிற்கே காரணமாகின்து என எச்சரிக்கின்றது. இதனை ஸூறா தலாக் அழகாகத் தெழிவுபடுத்துகின்றது. மேலும் நபி(ஸல்) அவர்கள் குடும்பவாழ்வின் மகத்துவத்தை, சிறப்புக்களை எடுத்துக் கூறியுள்ளார்கள். மாத்திரமின்றி அதனடிப்படையில் அழகான வாழ்க்கைமுறையை வாழ்ந்தும் காட்டினார்கள். எனினும் எமது சமூகம் இப்போதனைகளைப் புறக்கணித்து தான் வகுத்த வாழ்வின் அடிப்படையில் வாழ முற்பட்டமையால் இன்று பல குடும்பவியல்ப் பிரச்சினைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
இலங்கையில் அடுத்த சமூகங்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம் சமூகத்தில்தான் அதிக தலாக் நிகழ்வதாக பல ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. மாத்திரமன்றி தலாக் அதிகம் நடைபெறும் சமூகமாக முஸ்லிம் சமூகம் அந்நிய சமூகத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்ற கசப்பான உண்மையை ஜீரணித்துத்தான் ஆகவேண்டும். உண்மையில் குடும்பவியல் பற்றி ஏனைய மதங்கள் போதிக்காத பல போதனைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் நேரிய முன்மாதிரிகளையும் நாம் பெற்றிருந்தும் தலாக் எமது சமூகத்தில் மேலோங்கிக் காணப்படுவதானது எவ்வகையிலும் அங்கீகரிக்கமுடியாது. இந்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குடும்பவியல் விடயத்தில் அடுத்த சமூகங்களுக்கு பெரும் முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாம் அதற்கு முற்றிலும் மாற்றமாக செயற்படுகின்றோம். கொள்கையற்ற, மார்க்க விழுமியங்கள் அறியாத குடும்பவியல் வழிகாட்டல்கள் இன்றி வாழும் அடுத்த மதங்கள் தமது துணைவருடன் அல்லது துணைவியுடன் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையையும் எமது சமூகத்தில் காணமுடியாதுள்ளது.
1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட விஷேட நீதிமன்றமான காழிநீதிமன்றத்தில் எமது பெண்களும் இளம் யுவதிகளும் விவாகரத்துக்கோரும் விகிதாசாரம் உயர்வடைந்து வருகின்றது. சாதாரணமாக மாதத்துக்கு ஓரிரு வழக்குகள் வந்தால் சிலவேளை நியாயம் காணமுடியும். ஆனால் ஒரு வாரத்திற்கு பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் விவாகரத்துக்கோரி தாக்கல் செய்யும் வழக்குகள் என காழிமார் தெரிவிக்கின்றனர். இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டிய விடயம். இது எமது சமூகத்தின் வரட்டுத்தன்மையையும் சமூகத்தின் வீழ்ச்சித் தன்மையையும் சான்றுபகர்கின்றது. குடும்ப வாழ்வில் இணைந்த ஒரு சில காலப்பகுதிகளுக்குள் தம்பதிகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் மேலோங்கி விட்டுக்கொடுப்பு இன்மையால் உடனடியாக தலாக் நிகழ்கின்றது என்றால் இது இஸ்லாமிய மார்க்கத்தில் கோளாறு அல்ல. முஸ்லிம்களிடத்தில்தான் கோளாறு காணப்படுகின்றது என துணிந்து கூற முடியும்.
கடந்த 5ஆண்டுகளில் தலாக் இடம்பெற்றமைக்கான அடிப்படைக் காரணிகள்.
1. பெரும்பாலான மக்களிடம் மார்க்க அறிவின்மை.
பெரும்பாலான காழிமார்கள் தலாக்கிற்கான காரணங்களைப் பட்டியற்படுத்தும்போது எமது சமூகத்தாரிடம் மார்க்க அறிவு குன்றிக் காணப்படுகின்றது குறிப்பாக படிக்காத வர்க்கத்தினரிடம் மிகவும் குன்றிக்காணப்படுகின்றது என குறிப்பிட்டார்கள். உண்மையில் இஸ்லாம் கணவன் மனைவி தெரிவு - குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
நபி அவர்கள் தெளிவாக்கினார்கள்: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம்இ மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! (புகாரி.முஸலிம்)
எனினும் எமது சமூகம் இப்போதனைகளைப் புறக்கணித்து தான் வகுத்த வாழ்வின் அடிப்படையில் வாழ முற்பட்டமையால் இன்று பல குடும்பவியல்ப் பிரச்சினைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
2. சீதனப்பிரச்சினை
அம்பாரை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் திருமணத்தின்போது சீதனப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது. சீதனம் இன்றேல் திருமணம் இல்லை, சீதனம்தான் திருமணத்திற்கான நுழைவாயில் என்றளவுக்கு இது முன்னுரிமைப் படுத்தப்படுகின்றது. முறையான பேச்சுவார்த்தை நடைபெறாமையாலும், கொடுக்கல் வாங்கலில் குறைவு, மோசடி போன்றவற்றாலும் திருமணத்தின் பின்னர் அவை தெரியவருவதாலும் மேற்படி தலாக் நிகழ்கின்றது. இங்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால் சீதனம் பெறுவது தெளிவான ஹராம். ஆனால் அதனை ஹராம் என்ற வட்டத்தை விட்டும் நீக்கி முபாஹ் (ஆகும்) என தமக்குத் தாமே பத்வாக் கூறிக்கொண்டு சீதனத்தைப்பெற்ற இவர்கள் பெண் தரப்பால் செய்த மோசடியை அல்லது குறையை சுட்டிக்காட்டி இவர்கள் எமக்குத் தரவேண்டிய பங்கை சுவீகரித்துவிட்டார்கள், இது ஹராம், இவர்கள் பாவிகள் என்று அவர்களுக்கு பத்வா என்ற பெயரில் தூற்றுகின்றனர். இது இங்கு சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. நான் மேற்கொண்ட ஆய்வின்படி சுமார் 40வீதமான தலாக்குகள் சீதனப்பிரச்சினையால்ஏற்பட்டுள்ளன.
3. ஆண் பெண் பொருத்தப்பாடின்றி திருமணம் முடித்தல்.
'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான்இ விபச்சாரி விபச்சாரணையோ அல்லத இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.' (அல்குர்ஆன் 24:3)
நபி அவர்கள் நவின்றார்கள்: 'பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம்இ அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம்இ அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை விட மேலானவள்' (முஸ்னத் அஹ்மத்.)
எனினும் எமது சமூகம் குடும்பவியல் சட்டத்தை பின்பற்றாது புரக்கணித்து வாழ்ந்தமையால் இன்று பல குடும்பவியல் பிரச்சினைகளை அணுபவித்துக்கொண்டிருக்கின்றது. குடும்ப வாழ்வில் இணைந்த ஒரு சில காலப்பகுதிகளுக்குள் தம்பதிகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் மேலோங்கி விட்டுக்கொடுப்பு இன்மையால் உடனடியாக தலாக் நிகழ்கின்றது.
4. தொழில் நிமிர்த்தம் கணவன் வெளிநாடு செல்லல்.
முஸ்லிம் கிராமங்களில் படித்து அரச, தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்களை விட விவசாயம், வர்த்தகம் போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் அதிகம். இத்தகைய குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் குடும்ப கஷ்டம், வறுமை காரணமாக தமது ழுஃடுஇ யுஃடு கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்கின்றனர். அங்கு பல வருடங்கள் தமது குடும்பத்துக்காக உழைத்து பொருளீட்டி மூன்று, நான்கு மாதங்கள் விடுமுறையில் ஊர் திரும்புகின்றனர். இந்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களின் குறிப்பிட்டகால பொருளாதார உயர் நிலையைக்கண்டு கவர்ச்சிகரமான செல்வத்தின் காரணமாக பெண் தரப்பால் திருமணம் பேசப்படுகின்றது. திருமணம் முடித்து மிகுதி ஒருமாதகாலம் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கையில் மீண்டும் பொருளீட்ட கணவன் வெளிநாடு செல்ல முற்படுகின்றார். தனது மனைவியை விட்டு பலவருடங்கள் பிரிந்திருக்கின்றார். இதன் காரணமாக பல பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.
5. நவீன தொடர்புசாதனங்களின் விபரீதங்கள்.
இன்றைய நவீன யுகத்தில் நவீன தொடர்பு சாதனங்களின் அதீத வளர்ச்சியினாலும் இணைய பாவனைக்கான சகல வசதிகளும் நிரம்பிக் காணப்படுவதனாலும் அந்நியர்களுடனான தொடர்புகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது. நவீன ஜாஹிலிய்யத் மேலோங்கிக்காணப்படுகின்றது. குறிப்பாக சமூக இணையத்தளமான FACEBOOK ஆண்பெண் தொடர்பு இன்று மிக இலகுவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாகி பின்னர் நம்பிக்கையின் அடிப்படையில் தமது விருப்பு வெறுப்புக்கள் பரிமாறப்பட்டு தமது அந்தரங்க விடயங்களைக் கூட வெளிப்படுத்தி இறுதியில் பெரும் நம்பிக்கையோடு தனது அன்பான கணவரை அல்லது மனைவியை, தன்னை நம்பியுள்ள குடும்பத்தை தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை துறந்து செல்கின்ற சம்பவங்களை அதிகமாகக் காணமுடியும்.

Post a Comment