எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தப்ஸீர் துறையில் M.Phil பட்டம் பெற்றார்
(Abu Athif)
மாவனல்லையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் முஹம்மது நிஷாத் (நளீமி) அவர்கள் இன்று (2013/07/06) எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தப்சீர் துறையில் (அல் குர்ஆன் விளக்கவுரை) M.Phil பட்டம் பெற்றார்.
சகோதரர் முஹம்மது நிஷாத் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் ஷரீஆ கல்வியினைப் பூர்த்தி செய்து 1999 ல் நளீமிய்யா பட்டதாரியானார், அதனைத் தொடர்ந்து 2001 ம் ஆண்டு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் புலமைப் பரிசில் பெற்று எகிப்து சென்றார். பின்னர் 2004 ம் ஆண்டில் தப்ஸீர் துறையில் B.A. பட்டத்தையும், 2008 ல் அதே துறையில் துறையில் M.A. பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பேராசிரியர் கலாநிதி மஹ்மூத் முஹம்மது கத்தாஸ் அவர்களின் மேற்பார்வையில் “ஆட்சி அதிகாரம் பற்றிய நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விளக்கம் - ஓர் குர்ஆனிய ஆய்வு“ என்ற தலைப்பில் தனது ஆய்வைப் பூர்த்தி செய்த இச் சகோதரர் இன்று முதல் தர சித்தியுடன் M.Phil பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆய்வு மதிப்பீட்டுகுழு குறித்த ஆய்வை பல்கலைக்கழக செலவில் பதிப்புக்குமாறு பரிந்துரைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதேதுறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்று சமூகத்துக்கு அவரது அறிவுப்பணி தொடர அல்லாஹ் அருள் புரிவானாக.


கலாநிதி நிக்ஷாத் அவர்களை சிறுவயது முதலே அறிவேன்.கண்ணியமான குடும்பப்பிண்ணணியைக்கொண்டவர்.அடக்கமானவர்.தப்ஸீர் துறையில் அவர் அடைந்துள்ள தேர்ச்சி எதிகாலத்தில் எமது சமூகத்திற்கு மிகப்பெரிய வளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteMashaallah
ReplyDeleteMasha Allah! Barakallahu leka - Abdurraheem Naleemi
ReplyDeleteMasha Allah
ReplyDelete