Header Ads



அரசாங்கம் அடக்கி வாசிப்பது ஏன்..?

இலங்கைக்கு  கடந்தவாரம் வந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் செய்தி ஒன்றை மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். 

இந்த கடிதத்தில், அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தவோ அல்லது, ஒழிக்கவோ நடவடிக்கை மேற்கொண்டால், அனைத்துலக அரங்கில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையின் போதும், இந்தியா ஆதரவு தராது என்று நேரடியாகவே எச்சரித்துள்ளார். 

இதன் பின்னரே, அரசாங்கம் 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக அடக்கி வாசிப்பதாக, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

“சிறிலங்காவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியாவே உள்ளது.  தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஆட்சியை நடத்த அரசின் மீது இந்தியத் தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.  இந்தியாவின் தாளத்துக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் ஆடுகிறது. 

பசில் ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம் மற்றும் சிவ்சங்கர் மேனனின் கொழும்புப் பயணத்தை அடுத்து, 13வது திருத்த விவகாரத்தை கைவிட்டு விட்டது  அரசாங்கம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்ட போது, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்பட்டது. 

இப்போது 6 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  வடக்கு மாகாணசபைத் தேர்தல், கொமன்வெல்த் மாநாடு ஆகியவற்றின் பின்னர் தான் இந்த அறிக்கை வெளியாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.