இந்த நேர்மையான அரசியல்வாதியை தாராளாக பாராட்டலாம்..!
(Vi) மத்திய மாகாணசபை கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அம் மாகாணtத்தின் விவசாய சுற்றாடல் துறை முன்னாள் அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ தனது சொந்தத் தேவைக்கென வழங்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி உட்பட அனைத்து ஆவணங்களையும் அவ் அமைச்சின் செயலாளர் கே. கெகுலந்தரவிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தன்னிடம் மற்றும் தனது அமைச்சின் ஊழியர்களிடம் இருந்த ஆவணங்கள், கனணிகள், வாகனங்கள், கையடக்கத்தொலைபேசிகள் என அனைத்து அரச உடமைகளையும் இவ்வாறு கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை வைபத்தில் கலந்துகொண்டிருந்த பியசிரி நிகழ்ச்சி முடிவடைந்ததுடன் பஸ் தரிப்பிடத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்ஸொன்றின் மூலம் வீட்டுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

proud of u SIR
ReplyDeleteI know when I was working in CGR, former Prime Minister W.Dahanayaka use to travel on trains when he was a MP. I have issued train tickets to Habaraduwa MP Prince Gunasekara at Maradana Railway station personally. I still has glimpse of hope that we can produce those kinds of people again in Sri Lanka.
ReplyDeleteதஹநாயகாவைப் பற்றி பேசுற காலமா இது ! ஒரு எம் பீ யின் வாகனத்திட்கு முன்னாள் ,பின்னால் என்று எத்தனை பாதுகாப்பு வாகனங்கள் அரச செலவில் பறக்கின்றன இப்போது .ஒரு எம் பீ என்றால் என்ன கொக்கா ? அவரின் பெறுமதி என்ன தரம் , கவுறவம்,அந்தஸ்து இது எல்லாம் சாமாநியமானவைகளா ?
ReplyDelete