முஸ்லிம் போராளிகளுடன் தாய்லாந்து அரசு அமைதி ஒப்பந்தம்
தாய்லாந்து அரசுக்கும், அந்நாட்டின் தென்பகுதியில் இயங்கிவரும் முஸ்லிம் போராளிகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல்கள், ஏற்பட்டு வருகின்றன. இந்த சண்டை காரணமாக அங்கு இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இரு பிரிவினருக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மலேசிய அரசால் கடந்த பிப்ரவரி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால், அதில் விரைவான முன்னேற்றம் காணப்படவில்லை. மேலும், பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபின்னரும், தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. ரம்ஜான் நோன்புக்காலம் கடந்த புதன்கிழமை ஆரம்பித்ததால், இந்தப் புனித மாதத்தில் சண்டையில் ஈடுபடாமல் அமைதி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதை அடுத்து, தாய்லாந்து அரசும், முஸ்லிம் போராளிகளும் சண்டையை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
40 நாட்கள் சண்டையை நிறுத்துவதற்கான இந்த அமைதி ஒப்பந்தம் ஜூலை 10ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தெற்கு மாகாணங்கள் ஆனயலா, பட்டானி, நரதிவாட் , சோங்கியா ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

Post a Comment