Header Ads



திங்கட்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடகூட்டம் - தேர்தல்கள் குறித்து ஆராய்வு

எதிர்வரும் திங்கட்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கூடவுள்ளது. இதன் போது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாணகாண சபைகளுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ள நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது..

எதிர்வரும் வடமாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமென கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமுக்கும், பஸீர் சேகுதாவூத்திற்கும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முரண்பாடுகள் தோன்றியபின்னர் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் மீண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பசீர் சேகு தவூத் ராஜபக்ச அன் கோ இன் ஒரு தரகர்...!

    அவர் எப்போது முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளிஎற்றப்படுகிராரோ அப்போதுதான் இந்த கட்சி சரியான பாதையை நோக்கி முன்னேற ஒரு வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  2. தரகர் பசீர் சொல்லுவார் அரசோடு சேர்ந்துதான் கேட்க வேண்டும் என்று.அரசோடு சோ்ந்து நிற்பதை விட பசீர் சேகு தாவூதை கட்சியை விட்டு வழியேற்றுங்கள்.வரும் காலங்களில் ஒரு தேசிய பட்டியல் மிஞ்சும்.

    ReplyDelete
  3. Unkalukku vera velai illayada? Unkada aaraivum neenkalum..aarainthu kiliththu than vidduduvinka

    ReplyDelete

Powered by Blogger.