Header Ads



'தனியாக வரும் பெண்களுக்கு எந்த பொருட்களையும் விற்ககூடாது'

ஆண் துணை இல்லாமல் மார்க்கெட் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வரக்கூடாது என வடமேற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய மதத்தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

 கைபர் பக்துங்வா மாகாணத்தை சேர்ந்த கரக் பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமிய மதத்தலைவரும் ஜமாத்-இ-இஸ்லாம் முன்னாள் தலைவருமான ஹபீஸ் அப்னே அமின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 மார்க்கெட் போன்ற பொது இடங்களுக்கு தனியாக வரும் பெண்கள் ஆபாசமாக நடந்துக் கொள்வதால் ஆண் துணை இல்லாமல் இனி பெண்கள் மார்க்கெட்டுக்கு போகக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

 இதனையடுத்து, தனியாக வரும் பெண்களுக்கு எந்த பொருட்களையும் விற்ககூடாது என்று எச்சரித்துள்ளனர்.

 இந்த உத்தரவை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் விடுத்த கோரிக்கையை போலீசார் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். 

1 comment:

  1. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுமல்ல. அங்கு இயங்குபவை இஸ்லாமியப் பிரச்சார இயக்கங்களும் அல்ல. அவர்கள் வழங்குவது இஸ்லாமிய கோட்படுகளுக்கமைவான பாத்வாக்களும் அல்ல பொதுமக்கள் அவற்றைப் பின்பற்றுவதற்கு. ஆபாசமாக ஆடை அணியும் பெண்களுக்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அவசியத்தை உணர்த்தி நல்வழிப்படுத்துவதைக் கைவிட்டு, மேற்கொள்ளும் முடிவுகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.