வீதிகளில் எச்சில் துப்புவது நாகரீகமான செயல் அல்ல
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பூங்காக்கள், பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் எச்சில் துப்பி அசுத்தம் செய்யப்படுவது அதிகரித்துவிட்டது. எனவே, அங்கு பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான சட்ட மசோதா உள்ளாட்சி துறை மந்திரி எரிக்பிக்கில்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், இங்கிலாந்து வீதிகளில் எச்சில் துப்புவது நாகரீகமான செயல் அல்ல. அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களுக்கு நாய்களை அழைத்து சென்று சிறுநீர் கழிக்க செய்வதும் குற்றமாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொது இடங்கள், பூங்காக்கள் மற்றும் நகர மையங்களுக்கு செல்லும் பொது மக்கள் எந்த வித தொந்தரவும் இன்றி பொழுதை கழிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment