யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார்..!
வடமாகாண சபைக்கான தேர்தல் வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண, கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக எத்தகைய விட்டுக் கொடுப்புகளையும், இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ள தமது கட்சி தயாராகவிருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
வடமாகாண சபை தேர்ததலில் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக எத்தகைய உபாயங்களை வகுத்துள்ளீர்கள் என ஜப்னா முஸ்லிம் இணையம் அமைச்சரிடம் வினா தொடுத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபற்றி அமைச்சர் றிசாத் மேலும் தகவல் தருகையில்,
யாழ்ப்பாண, கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டுமாயின் ஆளுக்கொரு கட்சியில் முஸ்லிம்கள் போட்டியிட்டு வாக்குகள் சிதறடிக்கப்படுவதை நிறுத்த தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை எமது கட்சி கொண்டுள்ள போதும் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக எவருடனும், எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு நான் தயாராகவுள்ளேன்.
இதுகுறித்து மாற்று முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளேன். யாழ்ப்பாண, கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்ககூடிய சுயேற்சை குழு களமிறக்கப்படுவது ஆரோக்கியமானது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சிந்திக்க வேண்டும்.
தற்போது வடக்கு முஸ்லிம்களும் நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ளனர். மீள்குடியேற்றத்தில் யாழ்ப்பாண, கிளிநொச்சி முஸ்லிம்கள் சவால்களை சந்திக்கின்றனர். அமையவிருக்கும் வடமாகாண தேர்தலில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் அதிக முஸ்லிம் பிரதிநித்துவத்தை வெற்றிகொள்ளமுடியும். இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

இதில் என்ன பிழையுள்ளது சரியான சிந்தனைதானே,,,, இதில் சமுதாயத்திற்கு நல்லது செய்யவேண்டுமென்ற நல்லெண்ணம் இருப்பதை உணரமுடிகின்றதா இல்லையா?
ReplyDeleteவரவேற்கத்தக்க விடயம்...