Header Ads



கல்முனை நிதாஉல் பிர் நிறுவனம் ரமழான் மாத ஏற்பாடுகள்


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

எதிர் வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை நிதாஉல் பிர் நிறுவனம் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

ரமழான் மாதத்தை முன்னிட்டு 1000 வறிய மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் முதல் நாள் தொடக்கம் பெண்களுக்கான கியாமுல் லைல் தொழுகை இரவு 8.00மணிக்கு ஆரம்பிக்கப்படும். தொழுகையைத்தொடர்ந்து பெண் முஅல்லிமாக்களால் விஷேட பயான்களும் இடம்பெரும் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அஸர்தொழுகை முதல் விஷேட பயான் நிகழ்வுகளும் இடம்பெறும். இதில் பிரபல உலமாக்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர் நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டாக ஸகாத் விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிதாஉல் பிர் நிறுவனத்துடன் இணந்து ஸகாத் வநியோகிக்க விரும்பும் தனவந்தர்கள் நிறுவனத்தின் பனிப்பாளர் அல்ஹாஜ் இஸட்.எம்.அமீன் அவர்களுடன்0772296767 எனும் கையடக்கத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.