வடமாகாண சபை தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணசபையை உருவாக்கும் உத்தரவிலும் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். வடக்கு மாகாணசபைக்கு வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதனுடன், சேர்த்து, வடமேல் மாகாணசபை மற்றும், மத்திய மாகாணசபைக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கு வசதியாக இன்று நள்ளிரவுடன் இந்த இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்படவுள்ளன.
.jpg)
தீக் குளிப்போர் எங்கே!
ReplyDelete