அருள்மிகு ரமழானே வருக..! வருக..!!
(எம்.எம்.றியாஸ்)
பாவம் தடுத்திடும் பாதகாப்பு கேடயமாய்...
கோபம் வென்றிடும் குணத்தின் பாடமாய்..
சாபம் இன்றிய சன்மார்க்க பெட்டகமாய்..
வேஷம் கலைந்த நேச மிகு இதயமாய்...
நம்மை நாடி வரும்..
நேர்த்தியான ரமழானே...
நீ.....வருக....!வருக......!
வானில் மிதந்த திருவேதம்..
வானோர் வாழ்த்த நாம் ஓத
தேனினும் இனிய திருநபியின்
திருவாய் மொழிந்த..
பொன் மொழிகள்
தினமும் இதமாய் நாம் மொழிய...
அருள் மிக்க ரமழானே....
நீ.....வருக....!வருக......!
பாரினிலே குர் ஆனை
பாட மிட்ட ஹாபிழ்கள்....
கண்ணிய மிக்க காரிகளின்
கிரா அத்துக்கள்
சொட்டும் தேனாக...
காதுகளில் ஒலித்திடவே
புகழ் மிக்க ரமழானே...
நீ.....வருக....!வருக......!
பகலெல்லாம் பசித்து..
இரவெல்லாம் விழித்து ..
அகமெல்லாம் நிறைந்து...
அல்லாஹ்வை துதித்து..
அளவற்ற அருள் பெற்று..
நிகரற்ற நன்மைதனை
நிறைவோடு பெற்றிடவே...
வரமான ரமழானே.....
நீ.....வருக....!வருக......!
அல்லாஹ்வுக்காகவே நோன்பு...
அவன் மட்டும் அறியும் மாண்பு...
அருளாளனே..
அதற்கான சாட்சி...
அன்புடையோன் தருவான்
மாட்சி...
எமக்கு ஏன் வேறு பேச்சு
வேண்டாம் இனி...
சைத்தானின்
சூட்சி...
வாகை சூட வரும்
ரமழானை......
இனிதாய் இன்முகத்துடன்
வரவேற்போம்......
அருள்... மிகு... ரமழானே...! வருக....!! வருக....!!!
.jpg)
Ahlan Wasahlan Ya Shahr Baraka !!
ReplyDelete