Header Ads



கோவையில் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

(Inne) தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாரதிய ஜனதா சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் துடியலூர் என்ஜிஓ காலனியில் உள்ள மசூதி ஒன்றின் மீது இன்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இந்த குண்டுவீச்சில் யாரும் காயமடையவில்லை. ஆயினும் இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 75சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காலை அரசு பேருந்துகள்  இயக்கபட்டன. கிராமப் பகுதிகளில்  27 பேருந்துகள் மீது கல் வீசி தாக்கப்பட்டன.  இதைத் தொடர்ந்து கிராமப்பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதன்றி கல்வீசி தக்கியதாக 10 பேர் கைது செய்யபட்டு உள்ளனர். 

No comments

Powered by Blogger.