நோர்வே தூதுவருடன் சந்திப்பு
(ஏ.எல்.ஜுனைதீன்)
நோர்வே நாட்டின் தூதுவர் கேட்ஜோலோசன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோது சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளையும் அவர்களின் சாய்ந்தமருது அலுவலகத்தில் சந்தித்தார்.
அம்பாறை மாவட்ட பேரவையின் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எம் ஐ.எம் ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர், சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அல்-ஹாஜ் ஐ.எம்.இப்றாஹிம், மெளலவி அல்-ஹாஜ் எப்.எம்.ஏ.மெளலானா, டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், போதகர் எஸ். கிறிஸ்தோபர், பாஸ்டர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகிய பிரமுகர்கள் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
நோர்வே நாட்டுத் தூதுவரிடம் பேரவையினரால் இம் மாவட்டத்திலுள்ள தற்போதய நிலைமைகள் எடுத்துக் கூறப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது.


Post a Comment