முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஹஜ் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
கடந்த 2012ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவில் பரவ ஆரம்பித்த சுவாசத் தொற்று நோய்க்கு இதுவரை 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய அளவில் இந்நோய்க்கு 45 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மட்டும் இந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 38 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் என்னும் புனித யாத்திரையை மேற்கொண்டு சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வந்து அங்குள்ள காபா என்னும் புனித இடத்தின் முன் தொழுகை நடத்துவார்கள். அங்கிருந்து மெதினாவிற்கு சென்று முகமது நபியின் கல்லறையான மஸ்ஜித் அல் நவாபியைத் தரிசித்து வருவார்கள்.
வரும் அக்டோபர் மாதம் ஹஜ் யாத்திரைக்கு லட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், நோய்த்தொற்றுக்கு எளிதில் இலாக்காகக் கூடிய முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் ஹஜ் பயணத்தை தவிர்க்குமாறு சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
.jpg)
Post a Comment