Header Ads



ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில் பொதுபல சேனா அடாவடி..!


(மொஹமட் பாயிஸ்)

பதுளை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று பதுளை நிமல் சிரிபால டீ சில்வா தபால் கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுவருகிறது. 06-07-2013 இன்று காலை ஆரம்ப நிகழ்வு  பதுலை ஜம்இய்யதுல் உலமா கிளைத் தலைவர் மௌலவி இர்ஷாத் முஃமின் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது ஊவா மாகாண சபை உறுப்பினர்களான மானெல் ரத்னாயக்க, சட்டத்தரனி சுஜீவ ஜயசிங்க, அஜித் லியனகே, நிமல் ரத்னாயக்க மற்றும் பதுளை மா நகர முதல்வர் சட்டத்தரனி உபாலி நிஸ்ஸங்க குனசேகர உப நகராதிபதி நாலக நிஷான்த மா நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம். மன்சூர் ஆகியோரும் பதுளை பொலிஸ் நிலைய பொலிஸ் உதவி அத்தியட்சகர் திலகரத்ன உள்ளிட்ட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். இதன் போது ஏராளமானவர்கள் வருகை தந்து இரத்த தானத்தில் பங்கு கொண்டனர்.

இதன் போது பொதுபல சேனா இயக்கத்தினர் நகர் முழுவதும் உலமா சபையினர் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வில் சிங்கள, தமிழ் பௌத்தர்களின் கோடிக்கனக்கான பணத்தை கொள்ளையடித்த உலமாக்களின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வை சிங்கள, தமிழ் பௌத்தர்கள் எதிரப்போம் இதற்கு ஏமாற வேண்டாம் என்ற துன்டுப் பிறசுரங்களை நகரில் ஒட்டியிருந்தனர். இதனையடுத்து இரத்ததான நிகழ்வு ஆரம்பமான போது பதுளை நிமல் சிரிபால டீ சில்வா தபால் கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய பொதுபல சேனா இயக்கத்தினர் வருகைத் தந்த சிங்கள பிரமுகர்களை படம்பிடித்ததோடு இரத்ததானத்திற்கு வருகை தந்தவர்களை மிரட்டி அங்கிருந்து வெளியேற்ற முற்பட்டனர். இதனையடுத்து ஏற்பாட்டுக்குழு பொலிஸாருடன் தொடர்புகொன்டு நிலைமைகளை தெரிவித்ததையடுத்து இர்த்ததான நிகழ்வு இடம்பெரும் பிரதேசத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். தொடர்ந்தும் இரத்ததான நிகழ்வுகள் நடைபெற்றுவருகிறது. 



3 comments:

  1. If PBS transforms it like a movement as LTTE to disturb the normalcy with a hand bill or a poster as LTTE did in the past, then there comes a need for terrorism act to control it without any doubt. Come on Gota. Fashion Bug case, Kandy British Council incident and Badulla Blood donation incident are all enough to file cases and take action

    ReplyDelete
  2. The main problem is government doesn't have back born to react in this issue

    ReplyDelete
  3. Government means Bodhu Bala .Bodhu bala means Government

    ReplyDelete

Powered by Blogger.