மலேசியாசில் சுன்னா மாநாடு - இலங்கையிலிருந்தும் பிரதிநிதிகள்
(இக்பால் அலி)
மலேசியாவில் =ஆரம்பமாகும் சர்வதேச சுன்னா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெஹ் எம். எச். சேகுதீன் மதனி மலேசியா விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மலேசியாவிலுள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் 3. 4 ஆம் திகதிகளில் நடைபெறும் இம் மாநட்டுக்கு மாநாட்டாளர்களின் அழைப்பை ஏற்று இவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சவூதி அரேபியா, குவைட், கட்டார் உள்ளிட்ட ஏனைய அரபு நாட்டு மார்க்க அறிஞர்களுடன் ஏனைய நாட்டு மார்க்க அறிஞர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இவருடன் சமூக சமயப் பணியாற்றும் அஷ்ஷெஹ் ரயிஸ்சுதீன் மலேசியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment