முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்தது
(TM) புதுடில்லிக்கு வருமாறு இந்தியா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் இந்த அழைப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் நிராகரித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்யும் எந்த திட்டமுமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
"13ஆவது திருத்தம் தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை மேனனுடன் கொழும்பில் தெரிவித்துவிட்டோம். இதனால் இந்தியாவிற்கு செல்ல வேண்டிய எந்த தேவையுமில்லை" என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான இந்த அழைப்பு இண்டாவது தடவையாக இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13ஆவது திருத்தம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் முன்னர் உரையாடியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட அசோக் கே. காந்தா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இந்தியா வருமாறு அன்று அழைப்பு விடுத்திருந்தார். அதனையும் அக்கட்சி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
he he hehee.... we all know that this decision was taken by Rajapaksha family....... we dont trust you Mr Rauf Hakeem any more......
ReplyDeleteஹி ஹி ஹி மு.காங்கிரஸ்
ReplyDeleteThambi Ruaf Hakkeem Nienkal India Poonal Muslim Pirachchanai Pattri Pasavandum
ReplyDeleteAthanal Mahintha Raasah Coviethu Colluvar ..................?
Nienk Oru Vielanku Meean
Muslim Samugam Unkalia Ennoom Unarviellai
===============Kalmunai Mohamed Fowse++++++++++++
ange samoohathukkaaha 13 patri kathaithaal mahinda kofithu widuwaare enru niraharithu ulaan
ReplyDelete