சிலாவத்துறை உபதபாலகம், நிரந்தரக்கட்டிடம் அமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்படவேண்டும்
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலியின் இதயப்பகுதியாகிய சிலாவத்துறையில் இருந்த உபதபாலகமே இலங்கையின் முதல் உபதபாலகம் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றிருந்தது. இதற்கென நிரந்தர அரச கட்டிடம் இருக்கவில்லை.மறைந்த ராயப்பு தபாலதிபரின் வீட்டிலேயே 1990 வரை இது இயங்கிவந்தது.பின்னர் இடம்பெற்ற யுத்தத்தால் இக்கட்டிடம் அழிந்தது.தற்போது இத்தபாலகம் சவேரியார்புரத்தில் உள்ள எவ்வித சிறந்த அடிப்படைவசதியற்ற ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.இங்கு ஒரு அறையும் ,ஒரு மண்டபமும் உள்ளது.கிராம சேவை உத்தியோகத்தரும் இம்மண்டபத்திலிருந்து சேவை செய்து வருகின்றார்.இங்கு தபாலதிபராக செல்வரெத்தினம் துரைராஜ் என்பவர் கடமைபுரிகிறார்.இவரின் தந்தையும் கொக்குப்படையான் கிராம உபதபாலக அதிபராகக் கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தபாலகத்திற்கென தனியான நிரந்திரக் கட்டிடம் கட்டப்படவேண்டும்.அத்தோடு தபாலகத்தின் தரமும் உயர்த்தப்படவேண்டும்.தபாலகம் பூரண கணனிமயப்படுத்தப்பட வேண்டும்.இதன்மூலம் இலகுவாக மின்சாரக்கட்டணம்,தொலைபேசிக் கட்டணம்,பணக்கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றை இலகுவாகவும்,விரைவாகவும் செய்யக்கூடியதாக இருக்கும்.இதனால் இப்பிரதேசமக்கள் பெரும் நன்மை அடைவர்.இலங்கையின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சௌகரியங்கள் எமக்கும் வழங்கப்படுவதுடன், உரிய ஆளணியினரும் நியமிக்கப்படவேண்டுமென மக்கள் வேண்டுகின்றனர்.

Post a Comment