சிரியாவில் உணவுத் தட்டுப்பாடு
சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராளிக் குழுக்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். போராளிகள் வசம் வரும் பகுதிகளை லெபனன் ஹிஸ்புல்லா இயக்கத்துடன் சேர்ந்து அதிபர் படையினர் சண்டையிட்டு வெல்வதும் நடைபெற்று வருகிறது.
வர்த்தக நகரமான சிரியா அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை அரசுப்படையிடம் இருந்து போராளிகள் மீட்டனர். இந்நிலையில், மேற்கத்திய நகரங்களில் இருந்து அதிபரின் படைக்கு வரும் ஆயுத சப்ளையை தடுக்கும் நோக்கில் அப்பகுதிகளில் வழியாக வந்த உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு போராளிகள் தடைவிதித்துள்ளனர்.
இதனால் அலெப்போவில் மக்கள் கடும் உணவு பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். உணவு மற்றும் மருத்து பொருட்கள் தட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஒரு போராட்டுக்காரரை போராளிகள் சுட்டதாகவும் மனித உரிமை அமைப்பு எச்சரித்துள்ளது. அங்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்படுவதை பாதுகாக்க உலக சுகாதார அமைப்பும் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment