Header Ads



சுதந்திரக் கட்சியில் இணைந்தார் எஹியா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினரான எஹியா ஆப்தீன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில்,  நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ளதாகவும் எஹியா ஆப்தீன் தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை உறுப்பினராக செயற்படும் இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், 13ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வடமேல் மாகாண சபையில் வாக்களித்தமையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டார்.

பின்னர் இடம்பெற்ற அதியுயர் பீட கூட்டத்தில் பொது மன்னிப்பு கோரியதையடுத்து மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக  தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு எஹியா ஆப்தீன் கருத்துத் தெரிவிக்கையில்,

"கடந்த 15 வருடங்களாக நான் மாகாண சபை உறுப்பினராக இருந்துள்ளேன்.வட மேல் மாகாண சபையில் ஐந்தாக காணப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் தற்போது மூன்றாக மாறியுள்ளது. இதனை அதிகரிப்பது பற்றி சிந்திக்காது ஒரு பிரதிநிதித்துவத்தை மாத்திரம் பெறக்கூடிய வட மாகாண சபை தேர்தல் பற்றியே முஸ்லிம் காங்கிரஸ் தொடந்து சிந்திக்கின்றது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்காத்தின் பங்காளி கட்சியாக இருந்துகொண்டு தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது சிறந்ததல்ல. இதன் காரணமாக நாங்கள் வடமேல் மாகாண சபையில் கடுமையாக புறக்கணிக்கப்பட்டோம்.

இது போன்ற செயற்பாட்டினையே வட மேல் மாகாணத்தில் மேற்கொள்ளவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்கு பின்னரே புத்தளத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தொடந்து முஸ்லிம் காங்கிரஸிலிருந்துகொண்டு புத்தளம் மாவட்ட மக்களுக்கு எந்தவித சேவைகளையும் வழங்க முடியாது. இதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்துகொண்டேன்" என்றார். tm

6 comments:

  1. ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை கட்டியெழுப்பும் ஜனாதிபதியவர்களின் கரத்தை பலப்படுத்த எஹியா சேர் சேர்ந்திருக்காராக்கும்.

    ReplyDelete
  2. illathavanukku oru valy
    wallawanukku palawaly

    ReplyDelete
  3. Thoppi Thirumbura pakkam -uthaaranam......ivakukku Kodi thevai illai...latcham (maximum 5 latchum) pozum...palakottai ivar.....

    PLEASE PUBLISH THIS.......

    ReplyDelete
  4. கோடரிக்காம்பு .

    ReplyDelete
  5. Really i am writing commence other people i don't know what to write for you now Muslims heart are burning your putting petrol are you really mad? what you going to make world record?

    ReplyDelete
  6. தலைவர் ஹக்கீம் தனியறையில் பாடுகிறார்:

    'யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க.. என் காலம் வெல்லும் என்ற பின்னே.. வாங்கடா வாங்க..'

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.