கிரண்பாஸ் புதிய பள்ளிவாசல் - பௌத்தசாசன அமைச்சு அனுமதியை ரத்துச்செய்யுமா..?
கிரண்பாஸ் - சுவர்ணசைக்கி பள்ளிவாசல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவர் இதுதொடர்பில் அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்ததாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த பள்ளிவாசல் தொடர்பில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. புதிய பள்ளிவாசல் அமைப்பதற்கான அனுமதியை பௌத்த சாசன அமைச்சே வழங்கியிருந்த நிலையில், அந்த அனுமதியை தற்போது ரத்துச் செய்வதற்கான வாய்ப்பு தென்படுவதாக முஜீபுர் ரஹ்மான சுட்டிக்காட்டினார். இன்று பள்ளிவாசல் தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் இதை உணரமுடிந்தது என முஜீபுர் ரஹ்மான் கூறினார்.
.jpg)
சட்டத்துக்குக் கட்டுப்படுவானுகளா? சங்கத்தானுகளுக்குக் கட்டுப்படுவானுகளா!
ReplyDelete