அமைச்சர்களின் புதல்வர்களும் வீதியில் இறங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது'
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாட்டில் வழமையாக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைக் காட்டிலும் தற்போது மாறுபட்ட சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.
சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் பகல் வேளையில் தாக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் புதல்வரது வாகனம் பகல் வேளையிலேயே தாக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமைச்சர்களின் புதல்வர்களும் வீதியில் இறங்கி நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். sfm

Post a Comment