Header Ads



தன்னை இழிவுபடுத்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய குவைத் மன்னர்

குவைத்தில் ஷேக் சபா அல் - அஹமத் அல் - சபா தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சி முறைக்கு எதிராக சிலர் மேடைகளிலும், பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் கருத்து தெரிவித்தனர்.

இவ்வகையில் கருத்து தெரிவித்த ஆண் மற்றும் பெண் இருபாலினருக்கும் மன்னரை இழிவுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சர்வ அதிகாரம் படைத்தவராக குவைத் ஆட்சிமுறை மன்னரை குறிப்பிடுகிறது. மன்னரை இழிவுபடுத்துபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவும் அந்நாட்டின் சட்டம் வழிவகை செய்கிறது.

எனவே, இவ்வகை குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலருக்கு அதிகபட்சமாக 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலர் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் தோன்றி பேசிய மன்னர், 'ரம்ஜான் மாதத்தின் கடைசி 10 தினங்களையொட்டி என்னை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன். அவர்கள் உடனடியாக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள்' என்று அறிவித்தார். 

3 comments:

  1. Can you please give chance to rlue the couuntry to another one like this manner.

    ReplyDelete
  2. Ivarukku tharala manasu allah rahmth seyvaanaha

    ReplyDelete
  3. For the Name of Allah he excused the people who published the wrong stories about him. Allah bless him

    ReplyDelete

Powered by Blogger.