Header Ads



அமெரிக்காவின் ராணுவ ரகசியத்தை விக்கிலீக்ஸ்கு கசியவிட்டவருக்கு 136 ஆண்டுகள் சிறை


அமெரிக்காவின் ராணுவ ரகசியத்தை விக்கி லீக்ஸ் இணையதளத்திற்கு கசிய விட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அதிகாரிக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களில் ஊடுருவி ஏராளமான தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் தெரிவித்தார். இதனால் அவரை அமெரிக்கா கைது செய்ய தீவிரம் காட்டுவதை அடுத்து மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஏற்கனவே விக்கி லீக்ஸ் இணைய தளம் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை கைது செய்ய அமெரிக்கா மறைமுக முயற்சிகளை மேற்கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ராணுவ அதிகாரி பிராட்லி மேன்னிங் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது ராணுவ ரகசியங்களை கசிய விட்டது, எதிரிக்கு உதவியது உள்பட 21 குற்றச்சாட்டுகளில் 19 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பிராட்லி மேன்னிங் தனது கூட்டாளி டேனியல் எல்ஸ்பெர்க் என்பவருடன் இணைந்து 1970ல் நடந்த வியட்நாம் போரின் போது அமெரிக்கா செய்த தகிடுதத்தங்களை பென்டகனில் இருந்து சுருட்டிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் மூலமாக வெளியுலகிற்கு தெரிவித்தார். இதனால் அமெரிக்க ராணுவம் அதிர்ச்சி அடைந்தது. 25 வயது இளைஞரான பிராட்லி மேன்னிங் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். இவரது வழக்கில் கடந்த 16 மணிநேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு தற்போது அவருக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தற்போது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்புக்கு விக்கிலீக்ஸ் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் தேசிய பாதுகாப்பு பயங்கரவாத முகத்தை காட்டுவதாக உள்ளது என விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.