பிராந்திய நிருபர்களுக்கு www.jaffnamuslim.com இன் ஊக்குவிப்புத் தொகை
இலங்கையின் முன்னணி தமிழ்மொழி மூல இணையமாகவும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மிக அதிகளவில் பார்வையிடுவதுமான www.jaffnamuslim.com தனது பிராந்திய நிருபர்களுக்கு சுழற்சி அடிப்படையில் 5 ஆவது முறையாக ஊக்குவிப்பு பணம் தொகை (ஜுலை மாதம்) வழங்கியதையிட்டு மகிழ்வடைகிறது. (அல்ஹம்துலில்லாஹ்)
மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர்களின் கருத்தின்படி இலங்கை முஸ்லிம்களை மையமாக கொண்டு செயற்படும், ஒரு முஸ்லிம் சார்பு ஊடகம், இவ்வாறு தனது பிராந்திய நிருபர்களுக்கும், பிரத்தியேக பத்தி எழுத்தாளர்களுக்கும் மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை வழங்குவது இதுவே முதன்முறை. (மாஷா அல்லாஹ்)
எமது இணையத்திற்கு கிடைக்கப்பெறும் விளம்பர கட்டணங்கள் மூலம் ஒருபகுதி பணம் நிர்வாக தேவைகளுக்கும், மற்றுமொரு பகுதி பணம் பொதுத் தேவைகளுக்கும் மேலதிக பகுதி பணம், ஊக்குவிப்புத் தொகையாக பிராந்திய நிருபர்களுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலும் எமது இந்த செயற்பாடு தொடரும்.
வாசகர்களின் ஒத்துழைப்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் நேர்மையான முறையில் தொடர்ந்து பயணிக்க உறுதிபூண்டுள்ளோம்..!!
www.jaffnamuslim.com
Skype ID - jaffnamuslim1990

superb.................. may allah bless the group............
ReplyDelete