Header Ads



ஹெம்மாத்தகமயில் தாக்குதல் - 2 முஸ்லிம் இளைஞர்கள் காயம்

(மொஹமட் ரபீக்)

ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 2 முஸ்லிம் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மொஹமட் ஹம்ஷா,  மொஹமட் பௌமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்கள் தற்போது மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்  6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுக்கப்பட்ட மாட்டின் தோல் ஒன்று வீதியில் காணப்பட்டமை தொடர்பில்  சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள காரணமாக அமைந்துள்ளதெனவும், மாட்டுத் தோல் காணப்பட்ட பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாகவும், தற்போது இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.