மாணவ சமூகம் கல்வித் துறையில் சாதணைகளை படைக்க வேண்டும் - அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
எமது மாணவ சமூகம் கல்வித் துறையில் சாதணைகளை படைக்க வேண்டும் என்பதினால் பல்வேறு வளங்களை பெற்றுக் கொடுத்துவருகின்றேன்.என்று தெரிவித்த வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இப்பாடசாலை முதற்தர பாடசாலையாக மிளிர பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குளம் மஹா வித்தியாலயத்திற்கான விஞ்ஞான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் கூறியதாவது,
இன்று இம்மாவட்டங்களின் அபிவிருத்தி பணிகளை நீங்கள் பாருங்கள்.எவ்வளவு வேகமாக நடை பெறுகின்றது.ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எதையெல்லாம் நாங்கள் கேட்கின்றோமோ அவற்றை தருகின்றனர். இதனைக் கொண்டு எமது மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் தாண்டிக்குளம்-இரணை இலுப்பைக்குளம் பாதையின் நிலையினை பார்த்திருப்பீர்கள்.அதில் பயணிக்க முடியாத நிலையே காணப்பட்டது.ஆனால் இன்று இப்பாதை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அபிவிருத்திகள் தான் மக்களுக்கு தேவை.
மாணவ சமூகம் கல்வியில் உயர் நிலையினை அடைந்து சிறந்த பதவிகளை பெற்று தமது பிரதேசத்துக்கும்,மாவட்டத்துக்கும்,நாட்டுக்கும் பணியாற்ற வேண்டும்.அப்போது தான் நாம் பெற்ற கல்வியின் பிரதிபலன்களை எம்மை வளர்த்தெடுத்த சமூகம் அடைந்து கொள்ளும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.


Post a Comment