மனித ஸ்டெம்செல் மூலம் கல்லீரல் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
மனித ஸ்டெம்செல் மூலம் கல்லீரல் உருவாக்கி ஐப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டெம் செல் மூலம் மனிதர்களின் உடல் உறுப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் மிக முக்கிய உறுப்பான கல்லீரலையும் ஸ்டெம்செல் மூலம் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள யோகோ ஹமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தகனோரி தகாபோ, ஹிடெகி தன்குசி என்ற 2 விஞ்ஞானிகள் அதை உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே இருக்கும் கல்லீரலில் 'புளுரிபொடென்ட்' ஸ்டெம்செல்களை செலுத்தி புதிய கல்லீரலை வளர செய்தனர். இதன் மூலம் கல்லீரல் தானம் பெறுவோர் பயனடைவர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment