Header Ads



வடமாகாண முஸ்லிம்களின் தெரிவு என்ன..?

(Inamullah Masihudeen)

கட்சி அரசியலுக்கு அப்பால் வட மாகாண முஸ்லிம்கள் மிகவும் சாணக்கியமாகவும் நிதானமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்! தேர்தலுக்கு மட்டும் எட்டிப் பார்க்கும் கட்சிகள் விடயத்தில் விழிப்பாக இருக்கவும் வேண்டும் ! 

அதேவேளை கடந்த காலங்களில் அறிக்கைகளைத் தவிர தங்களால் எதனையும் செய்ய முடியாது என்பதனை நிரூபித்தவர்களை மீண்டும் மீண்டும் நம்ப வேண்டும் என்பதும் தலை எழுத்துமல்ல.! 

தேர்தலுக்கு மட்டும் 13 ம் 19 ம் தேவையில்லை, மீள்குடியேற்றமும் ,அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், வாழ்வாதார ஏற்பாடுகளும் அவசியமானவை. வடக்கில் தமிழர்களுடன் புரிந்துணர்வுடன் வாழ்வது அரசியல் செய்வது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

வடக்கில்  புலிகளால் விராட்டியடிக்கப் பட்டமுஸ்லிம்கள் முழுமையாக மீள்குடியேற்றப் படுவதனை உறுதி செய்வது தமது தார்மீகப்பொறுப்பு என்பதனை கொள்கையளவில் பிரகடனம் செய்வதோடு அதற்கான கடப்பாடுகளை முஸ்லிம்களுடனான  உடன்பாடுகளாக தமது தேர்தல் விஞ்ஞாபன பிரகடனத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு  உள்ளடக்குமாயின் வட மாகாண முஸ்லிம்கள்  கூட்டணியுடன்  இணைந்து  செயற்படுவதே  ஆரோக்கியமான அரசியல்நகர்வாக இருக்கும்.!

அவ்வாறு ஒரு துணிகரமான நகர்வுக்கு வட மாகாண முஸ்லிம்கள் வரமுடியாது போனால் அல்லது ஆளும் கட்சி அரசியல் தான் தமக்கு குறைந்த பட்ச நம்பிக்கையையாவது  தரமுடியும் என்று கருதினால் மன்னார் முசலி மக்கள்  தமது வாக்குகளை சிதறடித்துக் கொள்ளாது  அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களுடைய அணியில் ஒன்றிணைந்து களத்தில் இறங்குங்கள்.! 

முஸ்லிம் காங்கிரஸும் தனித்துக் கேட்பதாக அறிவித்திருந்தாலும் சில விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. 

3 comments:

  1. Thanks for your valuable advice

    ReplyDelete
  2. Slmc didn't do any support for northern muslims resettlement . Because of them last local government election Muslim s lost chairman ship in five pradhesiya sabas in north.
    We are getting every thing from ACMC. Minister Hakeem don't disturb north Muslim . Don't contest alone in north. If u contest alone TNA will get benefit, Muslim s will loose their seat

    ReplyDelete
  3. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் சிந்திக்கக்கூடியதுமான விடயம். முஸ்லிம்கள் நன்றாகவே சிந்தித்து செயற்படவேண்டிய காலமிது, பொறுப்பிளுள்ளவர்கள் மற்றவர்களை நல்லமுறையில் வழி நடத்துவது நம் கடமைப்பாடாகும்.

    ReplyDelete

Powered by Blogger.