'வீதியில் நின்று வேடிக்கை பார்ப்பதே அமைச்சர் உதுமாலெப்பையின் வேலை'
(எம்.பைசல் இஸ்மாயில்)
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அட்டாளைச்சேனை மண்ணுக்கு வரலாற்றுத் துரோகத்தைச் செய்திருப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று சபையின் சபா மண்டபத்தில் பிரதித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தனது சொந்த ஊரின் அபிவிருத்திக்காக வருகின்ற நிதிகளை திசைதிருப்புவதும், வீதியில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதுமே அமைச்சர் உதுமாலெப்பையின் வேலையாகும். காட்டிக்கொடுக்கின்ற கூட்டம் இருக்கும் வரை குறிப்பிட்ட அந்த சமூகத்திற்கும், பிரதேசத்திற்கும் விடிவே இல்லை.
ஜெய்க்கா திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் உள்வாங்கப்பட்டிருந்தும் கடைசியில் அட்டாளைச்சேனையின் பெயர் மாற்றப்பட்டு பொத்துவில் பிரதேச சபை சேர்க்கப்பட்டது. இதற்குக் காரணம் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையாகும்.
பொத்துவில் பிரதேச சபை தனக்கு உதவி ஒத்துழைப்புக்களை வழங்கும் என்ற ஆசையில்தான் முதலமைச்சர் கேட்டபோது, அட்டாளைச்சேனை தேவையில்லை. எனது சிபார்சாக பொத்துவிலைப் போடுங்கள் என்று கூறியுள்ளார். இது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் இந்த வேலைகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே உதுமாலெப்பை அமைச்சர் பொறாமை கொண்டு அட்டாளைச்சேனையை புறக்கணித்துள்ளார். கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களின் விருப்பப்படியே பிரதேச சபைகள் முதலமைச்சரினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அட்டாளைச்சேனை மண்ணை புறக்கணித்துள்ளனர். அமைச்சர்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும் வீதிகளில் வலம்வருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியும் எமது மக்களுமே காரணமாகும். இன்று இதையெல்லாம் மறந்தவர்களாக மேடைக்கு மேடை பொய்யை அவிழ்த்துவிடுகின்றனர்.
உள்ளுராட்சி அமைச்சினால் அண்மையில் அம்பாரை மாவட்டத்திலுள்ள அரச சார்பு உள்ளுராட்சி மன்றங்களுக்கு வாகன வசதி வழங்கப்பட்டது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையை முற்றாக புறக்கணித்துள்ளனர். இதுதான் இவர்களது சேவையாகும்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை என்பது மூன்று இனங்களும் வாழ்கின்ற பரந்த பிரதேசமாகும். எமது சபையில் வாகன வசதியின்றி பல்வேறு சிரமங்களை நாம் அனுபவிப்பது குறிப்பிட்ட அமைச்சருக்கும் அவரது சகபாடிக்கும் தெரிந்தும் எம்மைப் புறக்கணித்துள்ளனர்.
கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அமைச்சினால் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற சில அபிவிருத்திப் பணிகளுக்கு எமது பிரதேச சபை எந்தவித தடைகளையும் போடவில்லை. எம்மைக் கேட்காமலேயே வீதிகள் தோண்டப்பட்டது. அபிவிருத்தி எமது மக்களுக்கானது என்ற காரணத்திற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்துள்ளோம்.
எமது கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கிம் அரசியல் நாகரிகத்தை எமக்குக் கற்றுத்தந்துள்ளார். நோன்பு காலம் வீதியை மறித்து டயர்போட்டு பள்ளியை அரசியல் மேடையாக மாற்றுகின்ற வேலைகளை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம். அதிகாரம் இன்றிருக்கும் நாளை இல்லாமல் போகலாம். ஆனால் சுயநலத்திற்காக பிறந்த மண்ணை காட்டிக்கொடுக்க முடியாது. அது தனது தாயையே காட்டிக்கொடுப்பதற்குச் சமமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி இந்நாட்டு முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தின் இதயமாகும். அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் ஆதரவுக்குக் குறைவில்லை. எதையும் தலைநிமிர்ந்து பேசவேண்டும். அற்பசொற்ப அபிவிருத்திக்காக பெரும்பான்மை இனவாதிகளிடம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்க முடியாது என்றார்.
.jpg)
உவைஸ் அவர்களே! உங்கள் ஊரில் இவ்வளவு அபிவிருத்திகளும் நடந்திருப்பதற்குக்காரணம் நீங்கள் வக்காளத்து வாங்குகின்ற உங்கள் கட்சியோ தலைவரோ அல்ல. மாறாக நீங்கள் இப்போது சீறிப்பாய்கின்ற உதுமாலெப்பையும் அவரது கட்சியும்தான் என்பதை நீங்கள் மறுத்தாலும் உங்கள் மனசாட்சி மறுக்காது. நீங்களும் உங்கள் ஊரில் பெரும்பான்மையானவர்களும் முஸ்லிம் காங்கிறஸிற்குத்தானே வாக்களித்தீர்கள். அபிவிருத்தி என்றால் மட்டும் எல்லாவற்றையும் உங்கள் ஊருக்குத்தான் செய்ய வேண்டுமா? அரசியல் பிரதிநிதி யாருமில்லாத மற்றப்பிரதேசங்களுக்கு சேவை செய்தால் உங்களுக்கு பொத்துக்கிட்டு வருதோ? இவ்வாறு மற்றவர்களை மோப்பம் பிடிப்பதை தவிர்த்து உங்களால் உங்கள் ஊருக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.
ReplyDeleteஉதுமானும்,அதபள்ளாவும் மக்களுக்குு என்ன செய்தார்கள்?ஊறார் கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதின கதைதான் இவரகளுடையது.முஸ்லிம் காங்கிரஸும் அட்டாளைச் சேனையும் இல்லை என்றால் இவர்கள் இருவரையும் வௌி உலகத்துக்கு தெரியுமா சகோதரரே?நீங்கள் சொல்லும் தலைவரை வௌி உலகுக்கு கொண்டு வந்ததே இந்த ஊர் மக்கள்தான் இவர்கள் இந்த ஊருக்கு செய்த துரோகங்களை அடுக்கி கொண்டு போகலாம்.தட்டிக் கேட்க அவ்வூரில் பிறந்த எவருக்கும் உரிமை உண்டு பொத்த வேண்டியதை நீங்கள் பொத்துங்கள்.
DeleteHe does like this nusance duty in other rural villagers also, History will not forgive him.
ReplyDelete?????
ReplyDeletemr uvais you are supporter of slmc.if you need anything you can ask your leader great rauf hakeem.he will do insha allah.he is the one now protect all muslim rights.what a shame leader
ReplyDelete