Header Ads



'பல்கலைக்கழக பஹிடிவதை ஹராமாகும்' - மௌலவி ஹாறூன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பல்கலைக்கழகங்களில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்யும் அநியாயகரமான பகடிவதை நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் அவனுக்கு சுவர்க்கம் ஹராமாகும் என ஓட்டமாவடி அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி மௌலவி எம்.எஃப்.எம்.ஹாறூன்(ஸஹ்வி) தெரிவித்தார்.

ஓட்டமாவடி அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் இன நல்லுறவைப் பேணும் வகையிலான வருடாந்த புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் இன மத மொழி வேறுபாடின்றி ஒரே நாட்டு ஒரே தேசத்து மக்கள் என்ற வகையில் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடனும் வாழ வேண்டும். இந்த இப்தார் வைபவமானது எங்களை இன மத வேறுபாடு என்பவற்றிற்கு அப்பால் ஒன்று சேர்த்துள்ளது.  இன்று இஸ்லாம் மதத்தை வித்தியாசமாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.பெண்களுக்கு அபாயா என்ற ஒன்றை கட்டாயப்படுத்தி உடம்பை முழுக்க மறைக்கச் சொல்வதனால் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது.

மாடறுப்பதன் மூலம் மிருக வதை செய்கிறது,நோன்பு பிடிக்கச் சொல்லுவதன் மூலம் மக்களை பட்டினி போடுகிறது என்று சில இடக்கு முடக்கான கேல்விகளைக் கேட்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப முயற்சித்து வருகின்றனர். நோன்பு நோற்பது என்பது காலையிலிருந்து மாலை வரை வெறுமனே பசித்திருப்பதற்காக வேண்டியல்ல.மாற்றமாக பொய் பொறாமை,கோள் சொல்லுதல் என்பவற்றை செய்யாது எமது உடலுறுப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் கண்,காது,மூக்கு,கால்,கை உள்ளிட்ட மனிதனின் உறுப்புக்கள் நோன்பு நோற்க வேண்டும். இஸ்லாம் அடுத்த மக்களுக்கு அநியாயம் செய்வதை கடுமையாக எதிர்க்கின்றது. அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மண்ணிப்பான்.ஆனால் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்யும் அநியாயத்தை அந்த மனிதன் மண்ணிக்காத வரை அல்லாஹ் மண்ணிக்கப்பட்டான்.

இன்றைக்கு பல்கலைக்கழகம்,கல்வியற் கல்லூரிகள் என்பவற்றில் பகடிவதைகள் காணப்படுகின்றன.நீ ஒரு மனிதனுடைய மனது புண்படும் அளவுக்கு நடந்து கொண்டால் உங்களுக்கு சுவர்க்கம் ஹராம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பகடிவதைகள் நிறுத்தப்பட்டு நாம் புரிந்துணர்வோடு வாழ்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

அபாயாவை அணியுமாறு இஸ்hம் சொல்லுவது ஏனெனில் ஆண்கள் என்போரிடத்தில் கவர்ச்சி இருக்கும்.பெண்களிடத்திலும் கவர்ச்சி இருக்கும்.ஆனால் இருவருடைய கவர்ச்சியும் வித்தியாசமானது.இப்படி உடம்பை மறைக்காமல் விட்டு விடுகின்ற போது அங்கே பல தகாத உறவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

நாம் மதத்தால் மாத்திரம்தான் வேறுபட்டவர்கள்.உள்ளத்தாலும் குணங்களாலும் ஒன்றுபட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆகவே எமது நடவடிக்கைகள் யாவற்றிலும் ஒற்றுமையாக செயற்பட்டு சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. எல்லா மாணவர்களுக்கும் தேவையான ஓர் உபதேசம்

    ReplyDelete

Powered by Blogger.