Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானம் - விட்டுக்கொடுக்கவும் தயார்

எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 3 மாகாண சபைகளிலும் தனித்துப் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

திங்கட்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல் விடயங்கள் ஆராயப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் வேண்டுகோள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் 3 மாகாண சபைகளிலும் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும். மாவட்டங்கள் தோறும் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

மேலும் வடமேல் மாகாண சபையில் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்தபோதும் அவர்கள் வழங்கிய விளக்கத்தின் அடிப்படையில் அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் தீர்மானம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் தேர்தலின் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடுவார்கள்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்று தீர்மானித்திருந்தாலும் வடமாகாண சபை தேர்தலின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்காக விட்டுக்கொடுப்புகளை செய்யவும் முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது என்பதை மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன். முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக பொதுச்சின்னத்தில் போட்டியிடவும், சுயேற்சைக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை நிறுத்தவும் தயாராகவுள்ளது.

இருந்தபோதும் வடமகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை எவரும் எம்முடன் உத்தியோகபூர்வமாக பொதுக்கூட்டணியில் கேட்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனினும் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும், கிளிநொச்சி முஸ்லிம்களின் நலன்கருதி நாங்களும் விட்டுக்கொடுப்புக்கு தயார் எனவும ஹசன் அலி எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

3 comments:

  1. முஸ்லிம் கட்சிகள் கட்சிகள் ஒன்று சேர எத்தனை தருணம் இதுபோல் ..... இனியும் ?
    கை கோருங்கள்

    ReplyDelete
  2. We know that you are ready to do anything to get some power are use it for your personal benefits.

    ReplyDelete
  3. Well said Habeeb Jamaldeen.

    ReplyDelete

Powered by Blogger.