Header Ads



வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க உத்தரவு..!

(எம்.எஸ். பாஹிம்)

வடக்கு, கிழக்கு முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விடயங்கள், மனித உரிமை, சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் அடங்கலான நல்லிணக்க ஆணைக்குழுவின் 53 பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு நேற்று ஆலோசனை வழங்கினார்.

இந்த பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை முன்னெடுப்பது தொடர்பான தேசிய செயற்பாட்டு திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்தும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஆராயும் விசேட கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்றது.

மகாவலி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

இதன்போது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் தேசிய செயற்திட்டத்தில் உள்ளடங்கும் 21 அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களினால் தமது நிறுவ னங்களினூடாக பரிந்துரைகள் அமுலாகும் விதம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துகையில் அமைச்சு மட்டத்தில் எழும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து அவற்றை முன்னெடுக்குமாறும் அவர் இங்கு ஆலோசனை அளித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்காத ஆனால் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களில் உள்ளடங்கும் விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் சகல அமைச்சுக்க ளுக்கும் ஆலோசனை வழங்கினார்.

இவற்றை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் தேசிய செயற்பாட்டு குழுவொன்றை நியமித்துள்ளது தெரிந்ததே.

1 comment:

  1. தேர்தல் காலம் என்பதற்காகவா?

    ReplyDelete

Powered by Blogger.