Header Ads



ஆஸ்திரேலியா குவீன்ஸ்லாந்தை முற்றுகையிட்டுள்ள பறவைகள்..!

ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் மழை குறைவாக உள்ள காரணத்தால் பல பகுதிகள் வறட்சிப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 மேற்குப் பகுதியில் உள்ள பௌலியா நகரமும் இவற்றுள் ஒன்று என்றபோதிலும்இ அங்கு சாலையோர மரங்களும்இ பூங்காக்களும் நகராட்சியினால் பராமரிக்கப்படுகின்றன. இதனால் வறட்சி காரணமாக இடம் மாறிய இளஞ்சிவப்பு காலா பறவைகளும்இ வெள்ளை காக்கடூ பறவைகளும் 2000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பறந்துவந்து இங்குள்ள மரங்களில் தஞ்சம் புகுந்துள்ளன.
 
இது பார்ப்பதற்கு கண்ணுக்கு இனிய காட்சியாக இருந்தபோதிலும்இ மின்சாரம் செல்லும் கம்பிகளில் அவை கூட்டமாக அமர்ந்து பின்னர் பறக்கும்போது கம்பிகள் உராய நேர்வதில் அங்கு அடிக்கடி மின்தடங்கல்கள் ஏற்படுகின்றன. 

மழைக்காலம் தொடங்கும் நவம்பர் மாதத்தில்தான் இவை திரும்பச் செல்லும். எனவே, இவற்றுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும் என்று அந்நகர மேயர் ரிக் பிரிட்டன் பிபிசி செய்தி ஒன்றில் கூறியுள்ளார். 

தங்களுடைய நகரமும் உலர்ந்த வறண்ட நிலம்தான் என்றபோதிலும், மரங்களும், புல்வெளிகளும் அமைத்துப் பராமரிப்பதினால் பறைவைகள் இந்த இடத்தைப் பசுமையான ரகசிய சொர்க்கம் என்று நினைத்து இங்கு வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
சில உள்ளூர்வாசிகள் அவற்றை விரட்ட முற்பட்டபோதும்இ பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபடியால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆயினும் பெரிய பறவைக்கூட்டத்தைப் பார்க்க ஒருவர் விரும்பினாரே ஆனால் பௌலியா தற்போது அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறும் ரிக் பிரிட்டன்இ இந்தப் பறவைகள் தங்கள் பகுதிக்கு ஒரு வசீகரத்தைத் தருவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.