புதிய காதி நீதிபதியாக மீரா லெப்பை அலியார் நியமனம்
(நஷ்ஹத் அனா)
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் 2013.08.01ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு புதிய காதி நீதிபதியாக மீரா லெப்பை அலியார் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி 02ம் வட்டாரம் பி.எஸ். வீதியில் வசிக்கும் இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் ஆங்கில தமிழ் மொழி மூல பிரசித்த நொத்தாரிசாக கடமையாற்றுவதோடு சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழி பெயர்ப்பு டிப்லோமா சான்றிதழைப் பெற்று மும்மொழிகளுக்குமான சத்தியப் பிரமான மொழி பெயர்ப்பாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் உள்ளார்.
மீறாவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயம், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அக்குறனை அஸ்ஹர் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் சம்மாந்துரை தொழில் நுட்பக் கல்லூரி, இலங்கை திறந்த பல்கலைக் கழகம் ஆகியவற்றின் முறையே தேசிய ஆங்கிலச் சான்றிதழ் உயர்தொழில் ஆங்கிலச் சான்றிதழ் போன்றவற்றையும் பெற்றுள்ளார்.
ஓட்டமாவடி மத்தியஸ்த சபையின் முதலாவது தவிசாளராகவும், ஓட்டமாவடி ஜூம்ஆப் பள்ளிவாயல், பிரஜைகள் குழு போன்ற அமைப்புக்களின் செயலாளராகவும் கடமையாற்றிய இவர் தமிழ், சிங்கள ஆங்கில பத்திரிகைகளின் பிரதேச நிருபராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment