ஹரீஸ் எம்.பி.யும், கல்முனை பிரதேச செயலாளரும் பதில் தருவார்களா..?
கடந்த வருடம் 2012-06-07 ம் திகதி பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் தற்போது சகல இடங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தின் பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்களை வழங்காமல் பிரதேச செயலாளர் இழுத்தடிப்பதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் இதுவரை கவனமெடுக்கவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக கவனமெடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலையில் பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தங்களுடன் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் தமது பொறுப்புக்களை எடுத்து சம்பளம் பெறும் நிலையில், எப்போது நியமனம் கிடைக்கும் என ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த கல்முனை பிரதேச செயலக பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதத்தை வழங்க வேண்டிய பொறுப்பு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் முன்னுள்ள தலையாய கடமையாகும்.

Always our area officers and politicians are sleeping on these issues, They will not hurry and solve any matters early. They might be waited until their Angels’ orders.
ReplyDelete