Header Ads



'அமைச்சர் ஹெகலியவின் மகன் விமானத்தின் கதவை திறந்தது நாட்டுக்கு அவமானம்'

நாட்டில் பெரிய பதவியில் இருக்கும் நபர்களின் பிள்ளைகளுக்கு ஒழுக்கக் கோவை, சட்ட ஒழுங்கு கிடையாது ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை மிக கேவலமான விடயம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

கொழும்பில்03-07-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

மலசலகூட கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த குடிபோதையில் இருந்த கிரிக்கெட் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்றோம். இந்த கிரிக்கெட் வீரரின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் மற்றும் முழு நாட்டிற்குமே நன்கு தெரியும். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு போட்டிக்குச் சென்ற இந்த வீரர் 230 பயணிகளை ஏற்றிய விமானத்தில் குடிபோதையில் அநாகரீகமாக ஒழுக்கமின்றி நடந்து கொண்டமை முழு நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு பெரிய பதவியில் இருக்கும் நபர்களின் பிள்ளைகளுக்கு ஒழுக்கக் கோவை, சட்ட ஒழுங்கு கிடையாது. இவ்வாறான செயற்பாடுகளை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை கேவலமான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை ஓடும் விமானத்தின் கதவைத் திறந்தவர் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிக ரம்புக்வெலவின்  மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.