Header Ads



பொதுபல சேனாவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் பேச்சு..!

இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் மாறும் அசாதாரன நிலையை நாளுக்கு நாள் வளர விடாமல் தடுப்பதற்கும், சுமுகமான முடிவொன்றை கொண்டு வருவதற்கும், பல சமூக அக்கறையுள்ள குழுக்கள் முயற்சித்து வருவது அறிந்ததே.

சென்ற வியாழக்கிழமை (நேற்று முன் தினம் )மாலை கொழும்பு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி குமார ஹிரிம்புரேகம (Dr. Kumara Hirimburegama ) பொதுபல சேன அமைப்பு மேல் மட்ட உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் சிலருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கொழும்பு தும்முள்ள சந்தியில் உள்ள பொதுபல சேன அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பொதுபல சேன சார்பில் கிரண விமலஜோதி தேரர், கலகொட அத்தே ஞானசார தேரர், திலந்த விதானகே ஆகியோருடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டுவரும் சங்கைக்குரிய பானகல உபதிஸ்ஸ தேரர். (Chairman Mahabodi, Yosida foundation) ஆகியோரும், முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில் மாத்தளை நகர மேயர் ஹில்மி முகம்மத் மற்றும் அவரின் செயலாளர் A.M. ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உத்தியோக பூர்வமற்ற முறையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நடந்த விடயங்கள் மற்றும் கலந்தாலோசிக்கப் பட்ட  விடயங்கள் பற்றி மாத்தளை நகர மேயர் இன் செயலாளர் A.M. ரியாஸ்  எம்முடன் பகிர்ந்த விடயங்கள் இவை.

பொதுபல சேன அமைப்பு தமது குற்றசாட்டாக..

*கிழக்கு மாகாணத்தில் பல பெளத்த விகாரைகள் முஸ்லிம்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
*முஸ்லிம் பெண்கள் முகத்தை புர்காவை தடை செய்ய வேண்டும். குற்றவாளிகள் முகத்தை மூடி தீவிரவாத மற்றும் குற்றங்களை செய்வதற்கு இம்முறை உதவி செய்கின்றது.
*முஸ்லிம் வைத்தியர்கள் (V.O.G.) சிங்கள தாய்மாருக்கு சிசேரியன் என்ற பெயரில் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டை செய்கின்றனர்.
*முஸ்லிம்களில் 12 தீவிரவாத அமைப்புகள் இயங்குவதுடன் 12 000 போர் பயிற்சி பெற்றவர்கள்   உள்ளனர்.
*அத்துடன் 400 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புக்கள் இலங்கையில் உள்ளன.

அத்துடன் மேலதிக விடயமாக 'முஸ்லிம்கள் ஒரு சிலரே எங்களுக்கு தகவல்களை தருகின்றனர். இவ்வாறு இவர்கள் வழமையான குற்றச்சாட்டுகளை வைத்தாலும் ஒரு சில விடயங்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் என  ரியாஸ்  தெரிவிக்கின்றார்.

அதாவது அவர்கள் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்காவை தடை செய்ய வேண்டும் என்று கூறும் போது, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடாமல் அணியும் ஹபாயா முறையை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். இந்த உடையில் பெண்கள் மிகவும் கண்ணியமாக தெரிகின்றனர். அத்துடன்  நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மேலும் நீங்கள் முஸ்லிம்கள் கலந்தாலோசித்து மேலுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கும் பட்சத்தில் நாங்கள் மேடைகள் அமைத்தோ, ஊடக சந்திப்புகளிலோ சத்தம் போடத் தேவையில்லை. என கூறியுள்ளனர்.

அத்துடன் இலங்கை நாட்டில் முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் வாழ்வதை தாங்களும் விரும்புவதாகவும். மதங்களுக்கு இடையில் வேற்றுமையை தோற்றுவிக்க இந்த அமைப்பை நாங்கள் உருவாக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதன்போது இவர்களுக்கு பதில் அளித்த முஸ்லிம் பிரதிநிதிகள் 

‘இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டை மற்றும் உயிரை கொல்வதை வன்மையாக கண்டிக்கிறது. அவ்வாறு செய்பவர் வைத்தியராக இருந்தாலும் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் உள்ளதா என கேட்டுள்ளனர்.  அதற்கு அவர்கள் விரைவில் ஆதாரத்தை தருவதாக கூறியுள்ளனர்.

மேலும் சில குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களை அளித்த முஸ்லிம் பிரதிநிதிகளுடன் இன்னும் ஒரு சில வாரங்களில் மற்றுமொரு பேச்சுவார்த்தையை நடத்தவும் இணக்கங்களுக்கு ஒத்து வரவும் பொதுபல சேன அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

இதன்போது இன்னும் சில கல்விமான்களையும் முஸ்லிம் தலைவர்களையும் தங்களுடன் அழைத்து செல்ல உள்ளதாகவும் அதன்போது பொதுபல சேன அமைப்பினருடன் புரிந்துணர்வு ஒன்றுக்கு நிச்சயம் தங்களால் வர முடியும் எனவும் ரியாஸ் மேலும் எம்மிடம் தெரிவித்தார். 

9 comments:

  1. no need to speak with BBS they are terrorist must band them

    ReplyDelete
  2. uruppadiyaaha pesa koodiyawarhal yaarul illamal pona oru mannum nadakkazu.......ellam arasiyal laafam pola than therihirazu...

    ReplyDelete
  3. நல்ல விடயம்

    ReplyDelete
  4. My opinion no need to any peace talk with them,later them self they will come tired and gave up.Myself i never take these peoples speech to serious,just ignore them.

    ReplyDelete
  5. இருக்கிரதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிரதென்றும் சொல்லும் பைத்தியக்காரர்களோடு பேசி என்ன பளன்.

    பொய்யர்களுடன் பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை. இருக்கிர உரிமைகளையும் விட்டுக்கொடுக்க வேன்டி வரும்.

    பீ.பீ.எஸ். ஒரு பயங்கரவாத இயக்கம். இவர்களுடன் பேச்சுவார்தைகள் நடத்தாமல், இவர்களை ஒலித்துக்கட்டக்கூடிய நடவடிக்கைகளை செய்யுங்கள்.

    ReplyDelete
  6. கஞ்சா போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.Jaanasera pls consider abt these thing in ur socitty.

    ReplyDelete
  7. மேயர் மிஸ்டர் ஹில்மிமுகம்மதும் ,அவரது செயலாளரும் மாத்திரம் எதிரணியுடன் பேசுவதற்கு மாத்தளைக்கு மட்டும் உரியவிடயமோ,அல்லது அவர்களுடைய குடும்பபிரச்சனையோ அல்ல.ஒவ்வொருஇலங்கை முஸ்லிமும் உள ரீதியாகவும்,பொருளாதர ரீதியிலும் பாதிப்படைந்துள்ள மகா,மகா பிரச்சனையான விஷயம். ஏன் இவர்களுக்கு முஸ்லிம்களில் வோறு புத்திஜீவிகளோ ,உலமாக்களோ,அரசியல்வாதிகளோ தெரியவில்யா ? இதிலுமா சுயநலமும், அரசியல் இலாபமும்.

    ReplyDelete
  8. The Central Province election is ahead.....so hilmi kareem needs muslim votes...for that he needs to attend these types of meetings......nobody knows these 2 people......i dont know why they advertise them self.......during ramadan...

    ReplyDelete
  9. இது அரசியல் லாபம் கருதிய சந்திப்பு
    எதுவித பயனும் கிடைக்கப்போவதில்லை

    ReplyDelete

Powered by Blogger.