Header Ads



முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 4)

பொதுவான வினாக்கள்

1. 'நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால், நல்லவற்றை அதிகப்படுத்தியிருப்பேன், என்னை எத்தீங்கும் தொட்டிருக்காது' என ஒரு நபி கூறியதை அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு கூறிய நபி யார்? எந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது? 
2. 'மறுமையில் எனது உம்மத்தில் எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் புகுவர்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அவ்வாறு சுவனம் செல்பவர்களின் நான்கு இலட்சணங்களையும் குறிப்பிடுக.
3. 'என்னைப் பள்ளி வாசலுக்கு அழைத்து வர யாருமில்லை, வீட்டில் தொழுதுகொள்ள அனுமதியுண்டா? அல்லாஹ்வின் தூதரே!' என நபியவர்களிடம் வினவிய இரு கண்களும் குருடான ஸஹாபி யார்? அவரிடம் நபியவர்கள் கேட்ட வினா யாது? பதிலைக் கேட்ட நபியவர்கள் அவருக்கு அளித்த உத்தரவு என்ன? 
4. மக்களிடம் நடைமுறையில் விஷேசமாகக் காணப்படும் ஒரு செயலை நபி (ஸல்) அவர்கள் தடுத்துவிட்டு, 'அது எந்த நலவையும் கொண்டு வரப்போவதில்லை, அது உலோபியிடமுள்ளதை வெளியேற்றுவது மாத்திரம் தான்' எனக் கூறினார்கள். அச் செயல் யாது? இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ள ஆதார நூலொன்றைக் குறிப்பிடுக.
5. முகுர்த்தம் பார்த்தல், சாஸ்திரம் கூறல், நல்லஃகெட்ட நேரம் பார்த்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவோரிடம் செல்பவரின் நிலை பற்றியும், அங்கு சென்று கூறப்படுவதை உண்மை என ஏற்று வருபவரின் நிலை பற்றியும் இரு வேறுபாடுகளை ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. அவ்வேறுபாடுகளை மாத்திரம் குறிப்பிடுக.      
6. நபி (ஸல்) அவர்கள் தொழுகை, நோன்பு உட்பட எந்த வணக்கத்திலும் மனதினால் மாத்திரமே நிய்யத் வைத்தார்கள். நாவினால் மொழியவில்லை. ஆனால் இரண்டு வணக்கங்களில் மாத்திரம் நாவினால் மொழிவதுடன் மனதால் நிய்யத் வைத்தார்கள். அவ்விரு வணக்கங்களும் எவை? 
தொழுகைக்காகத் தக்பீர் கட்ட முன்பு 'உஸல்லீ பர்ள........' என, நோன்பு நோற்பதற்காக 'நவய்து ஸவ்ம கஃதின்.......' என  நிய்யத்தை நாவினால் மொழிவது பித்அத்தா?
7. யூத, கிறிஸ்தவர்கள் செய்த எச்செயல் குறித்து நபி (ஸல்) அவர்கள் தங்களின் மரண வேதனையில் 'யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' எனப் பிரார்த்தித்தார்கள்? 
8. ஸலவாத்களில் அதிக நன்மைக்குரிய மிகச் சிறந்த ஸலவாத் எது? அதான் கூறும் ஒருவர் எப்போது ஸலவாத் கூறுவது ஸுன்னத்? எப்போது ஸலவாத் கூறுவது பித்அத்?
9. 'அறியாமைக்கால நான்கு விடயங்கள் எனது சமூகத்தினரிடம் உண்டு. அவர்கள் அவற்றை விடுவதில்லை' என நபியவர்கள் கூறிய நான்கு விடயங்களும் எவை? சோதனைகளைத் தாங்காது ஒப்பாரி வைத்து அழுதவள் பாவமீட்சி பெறாவிடின் அவளுக்குரிய தண்டனை யாது?
10. பரிபூரணமான முறையில் வுழூச் செய்து எந்த துஆவை ஓதி வருபவருக்காக சுவனத்தின் 8 வாசல்களும் திறக்கப்பட்டு அவர்; நாடியதால் உள்ளே நுழையும் உயர் பாக்கியத்தைப் பெறுவார்? 
11. அபூ ஸலமா (ரழி) அவர்கள், அண்ணை ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் 'ரழழான் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறிருந்தது?' என வினவியபோது, ஆயிஷா (ரழி) அவர்கள் நபியவர்களின் தொழுகையை எவ்வாறு வர்ணித்தார்கள்? 

12. பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கு சரி  எனவும் பிழையான கூற்றுக்கு x எனவும் அடையாளமிடுக:

1. வுழூவின் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் தலையின் சில பகுதியை மாத்திரம் மஸ்ஹ் செய்யவில்லை (  )
2. நள்ளிரவில் மாதவிடாயிலிருந்து தூய்மையான பெண் உடனடியாகக் குளித்து இஷாத் தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். (  )
3. நபி (ஸல்) அவர்கள் பஜ்ரின் முன் ஸுன்னத், வித்ர் ஆகிய இரு தொழுகைகளையும் வழமையாகத் தொழவில்லை. (   )
4. தராவீஹ் தொழுகையின் ஒவ்வொரு ஸலாமுக்குப் பின்பும் 4 கலீபாக்களுக்காகப் பிரார்த்திப்பதும், ஸலவாத்துக்கள் ஓதுவதும் நபி வழியாகும். (   )
5. ஆண்களைக் கவர்வதற்காக மணம் வீசும் வாசனைகளைப் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு; வெளியே செல்லும் பெண் விபச்சாரியாவாள். (   )

No comments

Powered by Blogger.