முஸ்லிம்களின் மத உனர்வுகளுக்கு மதிப்புகொடுக்க இப்தார் நிகழ்வு - அனுர மடலுஸ்ஸ
(மொஹொமட் ஆஸிக்)
பூஜாபிட்டிய பிரதேச சபையினால் இரண்டு இப்தார் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் அனுர மடலுஸ்ஸ தெரிவித்தார்.
இன்று 2013 7 18 ம் திகதி இடம் பெற்ற பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தலைவர அனுர மடலுஸ்ஸ இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் இது சம்பந்தமாக கறுத்து தெரிவித்த அவர், பூஜாபிட்டிய பிரதேச சபை பிரிவக்குள் 20 சத வீதம் முஸ்லிம்கள் வாழ்வதாகவும் அவர்களது மத உனர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது எமது பொருப்பாகும் என்றும் தெரிவித்தார். அதனை கருத்தில் கொண்டு பிரதேச சபை மூலம் இரண்டு இப்தார் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அதற்காக 40,000 ம் ரூபாய் பணம் பிரதேச சபை மூலம் ஒதிக்கிவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கல்ஹின்னை மற்றும் கஹவத்தை ஆகிய பிரதேசங்களில் இவ் இப்தார் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் எதிர் கட்சி தலைவர் எஸ்.எம்.கலீல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான், சுயாதீன உறுப்பினர் எம்.யூ ரஸான் ஆகிய மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் பிரதேச சபைத் தலைவரின் தீர்மானத்தை வரவேற்றதுடன் அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Post a Comment