Header Ads



கிண்ணியா பிரதேசவாசிகளின் அவசர கவனத்திற்கு..!

(அப்துல் அஸீஸ்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிமைகோரப்படாத நிலையில் கிண்ணியா பிரதேசவாசி ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா மான்சோலையை  சேர்ந்த 68 வயதையுடைய அப்துல் காதர் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  சுகயீனம் முற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் நேற்று மாலை 5மணியளவில் மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும். வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மேலும் இந்த சடலம் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. வறுமையின் காரணமாகவோ அல்லது பிள்ளைகளால் கைவிடப்பட்டவரின் சடலமாக இருக்களாம். நல்லுள்ளங்கள் சட்டப்படி பொறுப்பேற்று நல்லடக்கம் செய்யலாம்.

    ReplyDelete

Powered by Blogger.