Header Ads



பாதுகாப்பான வாகனம் கேட்கும் படுகொலைகளின் சூத்திதாரி வாஸ் குணவர்த்தன

(பைரூஸ்)

பம்பலப்பிட்டியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரைக் கொலைசெய்த வழக்கில் சந்தேக நபராகவுள்ள கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தன, சிறைச்சாலையிலுள்ள இக்காலத்தில் நீதிமன்றத்திற்கு வருவதற்கு விசேட பாதுகாப்புடன் கூடிய வாகனமொன்றைத் தனக்குப் பெற்றுக் கொடுக்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது, நீதிமன்றத்திற்கு வருவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் விசேட பாதுகாப்புடன் கூடிய வாகனம் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறான வாகனம் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் வாஸ் குணவர்த்தன கேட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும் நீதிமன்றம் இவ்விடயத்தில் நியாயமான பதில் வழங்கியுள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.