அம்பாறை மாவட்ட தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபையின் கவனத்திற்கு..!
(யு,எல்,எம், றியாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபையினால்
விநியோகிக்கப்பட்டுவரும் நீர் விநியோகம் முறையாக வழங்கப்படுவதில்லை என பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இம்மாவட்டத்தின் கரையூரப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டுவருகின்றனர் .
அண்மைக்காலமாக இம்மாவட்டத்தில் நீர் விநியோகம் அடிக்கடி தடைப்பட்டுவருகின்றது அதுமட்டுமல்லாது மின்சாரம் நின்றுவிட்டால் நீர் விநியோகமும் நின்றுவிடுகின்றது . குறிப்பாக காலை வேளையில் நீர் விநியோகம் தடைப்படுவதனால் மக்களின் அன்றாட நடவடிக்கையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இதேவேளை நீரை சேமித்து வைக்கவும் முடியாத ஒரு நிலைக்கு பாவனையாளர்கள் உள்ளனர் காரணம் உயரத்தில் வீட்டு நீர்த்தாங்கிகள் இருப்பதனால் நீர் வரும் அமுக்கம் மிகவும் குறைவாக இருப்பதனால் தமக்கு
தேவையான நீரை பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.நள்ளிரவு வேளைவரை கண்விழித்திருந்து நீரினப்பெற வேண்டிய நிலைக்கு பாவனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நீர் பாவனைக்கான கட்டணப்பட்டியல் உரிய நேரத்திற்கு வீட்டுக்கு வருகின்றது ஆனால் பாவனையாளர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கையோ உரிய முறையில் வீடுகளுக்கு கிடைப்பதில்லை இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையாக நீர் விநியோகம் தடையின்றி விநியோகிக்க துரித நடவடிக்கை எடுப்பார்களா.. ??
.jpg)
Post a Comment