Header Ads



புலிகளை அழித்தது ''அல்லாஹ்'' தான் என கூறியதற்கு கண்டனம்

விடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லாஹ்´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஒரு மக்கள் பிரதி நிதி ´அல்லாஹ்´வின் பெயரில் அரசியல் செய்வது படு பிற்போக்குத்தனமானது.  மதவாத கருத்துக்களை முன்வைத்து முஸ்ஸிம் மக்களை திருப்திப்படுத்த நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களின் உணர்வுகளை இக்கருத்து எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்பதை அறியாமல் இருப்பது வேதனையான விடையமாகும். 

விடுதலைப் புலிகளினதும் ஏனைய தமிழ் இயக்கங்களினதும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துப்பார்க்கவோ வேறுபடுத்திப்பார்க்கவோ முடியாது. 

உண்மையான விடுதலைக்கும், உரிமைக்குமான போராட்டத்தை ´அல்லா´ தான் அழித்தார் என்று மதத்தையும், இஸ்ஸாமிய மத கடவுளையும் வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் படு பிற்போக்குத்தனத்தை ஹீனைஸ் எம்.பி கைவிட வேண்டும். 

அண்மைக்கலமாக குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தமிழ், முஸ்ஸிம் மக்களிடையே முரண்பாடுகளும், பேதங்களும் ஏற்பட காரணமாக இருந்த அரச தரப்பு வன்னி எம்.பிக்கள் தமிழ், முஸ்ஸிம் உறவுகள் சீராகி வரும் இன்றைய நிலையில் அரசியல் வறுமைக்குள் அகப்பட்டிருக்கும் வன்னி எம்.பியின் இவ் உரையானது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதற்கு ஒப்பானதாகும். 

தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, மீள் குடியேற்றம் போன்ற விடையங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளையும், மனங்களையும், புரிந்து கொள்ள மறுப்பது கவலையளிக்கின்றது.

வன்னி மாவட்டதின் முன்னால் அமைச்சர்கலான நூர்தீன் மசூர், அபூபக்கர் போன்றவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்கள்.  அது போன்ற முஸ்ஸிம் தலைவர்கள் இன்று இல்லாமல் இருப்பது தமிழ், முஸ்ஸிம் மக்களின் துரதிஸ்ரமே. 

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை நயவஞ்சகமாகவும், சலுகைகள் வழங்கியும், போலி வாக்குறுதிகள் வழங்கியும், மேசடி செய்த எம்.பிக்கள் இனியும் தமது அரசியல் வறுமையை நிறப்ப தமிழ் மக்கள் சந்தர்ப்பம் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்தே குனைஸ் பாரூக் எம்.பி முஸ்ஸிம் மக்களின் ஆதரவை தக்க வைப்பதற்காக இது போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றார். 

எனவே குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

14 comments:

  1. உங்களது வறுமைத்தனம் 30 வருட யுத்தம் தமிழ் பேசும் மக்களுக்கும் நாட்டிக்கும் எவ்வளவு அழிவைதந்தது என்பதை விட, இன்னும் புலிகளின் உரிமை போராட்டம் எந்தளவு சகோதர தமிழ் மொழி பேசும் இனத்தில் வெறுப்பையும் வடுவையும் ஏற்படுத்தியது என்பதைஉங்கள் மனம் ஏற்க மறுக்கிறது,...உங்கள் இனத்தில் உங்களுக்கு உள்ள அக்கறையைவிட அவருக்கு அவரது இனத்திலும் மதத்திலும் பற்று மிக அதிகம் என்பதை சுட்டுவதாகவே ஹுனைஸ் எம்.பி.இனது பேச்சு இருந்ததே ஒழிய அதை நீங்கள் பிற்போக்குவாதம் என கூறுவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை ...பாதிக்கப்பட்டவனின் பிராத்தனை ஏற்றுகொள்ளபடுவதர்க்கு இறைவனிடம் எந்த தடையும் இல்லை என்பது அவரது அசைக்க முடியாத இறை நம்பிக்கை அதனை அடியொட்டியே அவரது கருத்து இருந்தது என்பதை உங்களால் சீரணிக்க முடியாது இருப்பது உங்களது பிற்போக்குத்தனம் மட்டுமல்ல வறுமை தனமும் கூடவே உள்ளது.

    ReplyDelete
  2. தம்புள்ள பள்ளிவாசலைத் தாக்கியதும், முஸ்லிம் பெண்களின் அபாயாக்களை தென்னிலங்கையில் கழற்றியதும் 'அழ்ழாஹ்'தான் என்று 'ஹமவோஸ்த்' (எல்லாம் அவனே) பாணியில் சொல்லாமல் விட்டாரே.. அந்த வகையில் அவரைப் பாராட்ட வேண்டும்!

    இன வாதமும், மத வாதமும், பிரதேச வாதமும் தான் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் 'அரசியல் மூலதனம்'. அது இல்லாவிட்டால் இவர்களின் ஆசனங்கள் கேள்விக்குறியே!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. நாட்டில் இன்று எத்தனையோ விடயங்கள் செய்கைமூலம் கண்டிக்கவேண்டியுள்ளது, அவைகளைவிட்டு ஒரு நபருடைய வார்த்தைக்கு கண்டணம் தெரிவிப்பது இரு இனங்களிடையே பாரிய குழப்பங்களை உண்டாக்கும் செயல்பாடு என்பதால் இதுபோன்ற சிந்தனைகளை வன்மையாகக்கண்டிக்க படவேண்டும். இரு சமூகங்களிடையே உள்ள பழைய விடயங்களை மீண்டும் தோண்டி மனக்கசப்புகளை தோன்றிவிப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள நான் இங்கு பலவிடயங்களை சொல்லவிரும்பவில்லை. ஆகவே முஸ்லிம்களாக இருந்தால் எப்போது அல்லாஹ்வை நம்பித்தான் இருக்கின்றோம் எந்த விடயத்தில் வேண்டுமானாலும் நாங்கள் அல்லாஹ்வின் காரியம் என்பதைத்தான் உறுதிகொள்வோம் ஏன் எமக்கு நடக்கின்ற விபத்துக்களையும் சோதனைகளையும் அல்லாஹ்தான் எமக்குத்தருகின்றான் என்று நம்பும்போது அவர்கூறியது பிழையானதல்ல ஆகவே நீங்கள்தான் உமது குரோத்தனமான செயல்பாட்டை வெளிக்காட்ட முயற்சித்து குழப்பங்களை உண்டாக்க முயற்சிக்கின்றீர் ஆக இதுபோன்ற சின்னச்சின்ன விடயங்களே சமுதாயங்களிடையே குழப்பங்களை உண்டாக்கும் காரணிகளாக அமைகின்றதால் இவைகளை தவிர்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  4. I don't know how your going to justify LTTE is good? in addition they never done any thing for their own community even they kill tamil people i have huge list i don't want to remind again i love tamil people but not LTTE supporters. hunais farook mp 100%correct.

    ReplyDelete
  5. Mr. MP,
    Why are you still speaking from the dark? When will you come to the light?
    Don't you know that the Muslim Community suffered a lot by the atrocities committed by the heartless LTTE. Then, the entire Muslim community prayed to Almighty Allah to completely destroy the LTTE terrorists and it has happened so. Muslims did not pray against the Tamil community. It is well-known to all. As you say the term 'Allah'is not simply an Islamic God, but an Arabic term for the Supreme Power who created the entire worlds. Then, what is wrong with the statement of Hunaise Farook MP. Personally, I have never seen Hunais MP, but what he said was entirely right.

    ReplyDelete
  6. kaduvul enra warthaipiryoham nallathuthanea.alladu eraiwan enru solierukkalaam.thayawu seaithu ellorukkum velangakuudia warthaiperayohangalai seaithal nallathu.

    ReplyDelete
  7. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்குறான் . வசனம் பேசுவதை நிறுத்துவோம் அல்லா வுட்காக.

    ReplyDelete
  8. போலி முகத்துக்கு !!!!!!!! ???????????? ஒரு முஸ்லிமின் நம்பிக்கை சார்ந்த வார்த்தை "இன்ஷா அல்லாஹ்" "அல்லாஹ் நாடினால் " என்றுதான் மனத்தால் எண்ணி வார்த்தையால் பேச வேண்டும் அதற்க்கு சகோதரர் ஹுனைஸ் பாரூக் பாராளு மன்ற உறுப்பினர் மட்டும் விதி விலக்கா என்ன ?? ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் லச்சக்கனக்கான் மக்களை காவு கொண்ட இராட்ச்சத அலை சுனாமியை அனுப்பியதும் அல்லாஹ் என்று தான் நம்புறோம் அதில் சந்தேகம் வந்தால் நாங்கள் முஸ்லிம் அல்ல அது தெரியுமா? உங்களுக்கு (நடந்தவை கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு இனி நடப்பவை நல்லதாக நடக்க முயற்ச்சி எடுப்பது எமது கொள்கை) மற்றது பிரபாகரன் வகையறாக்களுக்கு நாங்கள் மரியாத செலுத்த எங்களை வட்புறுதாதீங்க ப்ளீஸ் அந்த ஆள் கட்டுப்பாட்டில் இருந்த பச்சிளம் பாலகர்கள் பெண்கள் வயொதிபர்கள் என்று கூட பாக்காம நான்கு மாவட்ட முஸ்லிம்களையும் கொட்டும் மாரி மழையில் பள்ளி வாசல் பாடசாலைகளைக்கூட பறித்து கொண்டு விரட்டிய வீர பரம்பரைக்கு வக்காலத்தா? ராசா? நடுக்கடலில் கையில் இருந்த குழந்தை விழுந்தது தெரியாமல் கல்பிட்டி கரை சேரும் வரை வெறும் துணிக்கு தாலாட்டு பாடிய தாய்மார்களை உனக்குத்தேரியுமா? அந்த வலி அகதியான சகோதரர் ஹுனைஸ் பாரூக் பாராளு மன்ற உறுப்பினர் அவர்களுக்கு இருக்காதா?? வேணாம் ப்ளீஸ்


    முள்ளிவாய்காலில் அப்பாவி சிறார்கள் மற்றும் அப்பாவி தமிழ் பெண்களையெல்லாம் பாலியல் பலாஸ்காரம் முள்ளிவாய்காலில் அப்பாவி சிறார்கள் மற்றும் அப்பாவி தமிழ் அக்காக்கள் பெண்களையெல்லாம் பாலியல் பலாஸ்காரம் செய்ய காரணம் புலிதலமைகளின் கடந்த கால அட்டூழியங்கள் நண்றி தமிழ் வாழ்க கத்தாரில் இருந்து இஹ்சான் காசிம்

    ReplyDelete
  9. சகோதரர் ஹுனைஸ் பாரூக் பாராளு மன்ற உறுப்பினர் டாக்டராக வேண்டியவர் திறமையான மாணவர் கல்வியை இழந்தார்

    ReplyDelete
  10. பூவி ரஹ்மத்துல்லாஹ் !!!! எழுதும் போது என்னத்தை எழுதுஹிறோம் என்பதை மூளை அணுக்களில் அலசி ஆராய்ந்து எழுதுவீர்களாக . சும்மா எல்லா அரசியால்வாதியும் எதிர்கப்படவேன்டியவன் என்ற வறட்டுக் கொள்ஹை ஒன்றை மட்டும் கொண்டு '' ரவுப் மௌலவியும் கஞ்சா நாளும்'' மாதிரியான ஞானத்தில் குழற வேண்டாம் . ஹுனைஸ் MP உம்மை தெரியாமல் மனம் நோகலாம். ஆனால் நாங்கள் காத்தான்குடியான்கள் உம்மையும் உமது உளறல்களையும் நன்கே அறிந்தவர்கள்.

    ReplyDelete
  11. Haroos farook konjam vaarthaiya alanthu pesanum ok ippo naatin nilamai theriyum la muttal mathiri pesakudathu unna elaam ............

    ReplyDelete
  12. எது எவ்வாறிருப்பினும் அடுத்தவர் மனதை புன்படுதுமாறு பேசுவதும் மத நம்பிக்கை கோட்பாடுகளை வைத்து அரசியல் பண்ணுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது

    ReplyDelete
  13. Hon.Hunais Farook inform them that "If did not destroyed LTTE by Allah then report or tell them all that the God deafeted them, so, the word .
    All are same on their veivw

    ReplyDelete
  14. Hello all, mind your words,It wont take much time to tell the truth, that the DESTROYER (one of the five divine duties of GOD SHIVA) doing well in arab.

    ReplyDelete

Powered by Blogger.