அமைச்சர் றிசாத்துடன் கல்கத்தா வர்த்தக பிரதிநிதிகள் சந்திப்பு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள கல்கத்தாவின் வர்த்தக சமமேளனப் பிரதி நிதிகள் கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து இரு தரப்பு வர்த்தகக செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையுடனான வர்த்தக தொடர்பு மற்றும் முதலீடுகள் குறித்து இந்த குழுவினர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்திலிருந்து கேட்டறிந்து கொண்டனர்.
இந்திய வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பொன்றை தமது நாட்டில் ஏற்படுத்துவது தொடர்பிலும்,கல்கத்தாவில் டிசம்பர் மாதம் இடம் பெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட வர்த்தக பிரதி நிதிகளை கலந்து கொள்ளுமாறு அதற்கான உத்தியோக பூர்வ அழைப்பு கடிதத்தினையும் இப்பிரதி நிதிகள் அமைச்சரிடத்தில் கையளித்தனர்
சுமார் 17 பேர் கொண்ட குழுவினர் அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினர்.அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தனவும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.


Post a Comment